சவுதி அரேபியாவை சமாதானப்படுத்த ரியாத் சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பஜ்வா அங்கிருந்து அவமானத்துடன்  நாடு திரும்பியுள்ளார். ரியாத் வந்த அவரை சவுதி இளவரசர் சந்திக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  அதாவது ஐக்கிய அரபு அமீரகம், குவைத், துபாய், பாகிஸ்தான் உள்ளிட்ட 57  நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டுமென பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோல் அந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்  என்பது பாகிஸ்தானின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தொடர்ந்து சவுதி அரேபியாவிடம்  கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்நாடு அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, இது குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர்  ஷா முகமது குரேஷி, சவுதி அரேபியாவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

காஷ்மீர் விஷயத்தை தேவையில்லாமல் சவுதிஅரேபியா தள்ளிப் போடுகிறது, சவுதி அரேபியாவால் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டம் முடியாது என்று கூறினால்,  நாங்கள் அந்த கூட்டத்தை கூட்ட தயாராக இருக்கிறோம். சவுதி அரேபியாவால் முடியாது என்று சொல்லி விட்டால், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என எச்சரித்திருந்தார். அதேபோல நாட்டின் பிரதமர் இம்ரான் கானும் சவுதி அரேபியா குறித்து காட்டமாக கருத்து தெரிவித்தார். அதாவது காஷ்மீரில் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுகிறார்கள், இதை சவுதி அரேபியா கண்டும் காணாமல் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானால் இப்படி இருக்க முடியாது, 57 இஸ்லாமிய நாடுகள் எங்கள் பக்கம் நிற்க தயாராக இருக்கிறது. சவுதி அரேபியா இதில் தயாராக இல்லை என்றால், பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நாங்கள் இந்தக் கூட்டத்தை நடத்துவோம். எனவும் குரேஷி எச்சரித்தார்.இதனால்  கோபமடைந்த சவுதி அரேபியா, கொடுத்த கடனை திருப்பி தருமாறு பாகிஸ்தானுக்கு கெடு விதித்தது. இந்நிலையில் சவுதி அரேபியாவை சமாதானம் செய்ய பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா ரியாத் விரைந்தார். 

ரியாத் வந்த அவரை  சவுதி இளவரசர் சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அவமானத்துடன் பாகிஸ்தான் திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்போது அவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பூஜ்வாவின் அந்த புகைப்படத்தை சொந்த நாட்டு மக்களே கேலி கிண்டல் செய்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ரியாத் சென்ற பஜ்வா சவுதி அரேபியாவின் ராணுவ தலைவருடன் அமர்ந்திருப்பதைப் போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாஜ்வாவின் வயிறு அவரது சட்டையில் இருந்து பிதுங்கி வெளியே வருவதை போல் அந்த புகைப்படம் அமைந்துள்ளது. ராணுவ தளபதி பஜ்வா வின் வயிற்றின் படத்தைப் பாகிஸ்தானின் பத்திரிக்கையாளர் நயல் இனாயத் என்பவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள், பஜ்வா தங்கள் நாட்டின் ராணுவத்தளபதி என்றும் பாராமல் அவரின் உடற் தகுதியை தொடர்புபடுத்தி கேலிசெய்து வருகின்றனர். 

பஜ்வாவின் அருகில் அமர்ந்துள்ள அரேபியாவின் ராணுவத் தலைவர்  சிக்கென, கனகச்சிதமாக இருப்பதாகவும், ஆனால் பஜ்வா வயிறு புடைத்து, ஒரு ராணுவத் தளபதிக்கு உரிய மிடுக்கு இன்றி இருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கேலி பேசி வருகின்றனர். பஜ்வாவின் புகைப்படத்தை பாலிவுட் பாடலுடன் ஓடவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். இன்னும் பலர் பஜ்வாவின் அழகைப் பார்த்தால் மயக்கமே வருகிறது,  முதலில் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள் பஜ்வா எனவும்  கமெண்ட் அடித்து  வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் இந்த புகைப்படத்திற்கு ரீட்வீட் செய்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ தலைவரின் உடற்தகுதி என்னவென்றால், அவரது சட்டை பொத்தான்கள் காற்றில் பறக்க தயாராக இருப்பதுதான் என்றும் பாகிஸ்தான் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே ரியாத் சென்று அவமானத்துடன் திரும்பியுள்ள பஜ்வாவை பாகிஸ்தான் மக்கள் உடற்தகுதியை  மையப்படுத்தி வச்சி செய்து வருகின்றனர்.