Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் பிரதமருக்கு வந்த திடீர் ஞானோதயம்... இந்தியாவுக்கு பயந்து நடுங்கி அந்தர்பல்டி..!

இந்தியாவுடன் ஒருபோதும் போரை தொடங்க மாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார். 
 

Pakistan will never ever start war with India Imran
Author
Pakistan, First Published Sep 3, 2019, 10:52 AM IST

இந்தியாவுடன் ஒருபோதும் போரை தொடங்க மாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார். Pakistan will never ever start war with India Imran

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை பெற முயற்சித்தது. ஆனால் அதில் தோல்வியடையவே பின்னர் போர் குறித்து அவ்வப்போது இம்ரான் கானும் பாகிஸ்தான் அமைச்சர்களும் உளறிக் கொட்டி வருகின்றனர்.

 Pakistan will never ever start war with India Imran

காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் தடுக்கவில்லை என்றால், அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை நோக்கி தள்ளப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மிரட்டல் விடுத்தார். ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது அவர் பல்டி அடித்துள்ளார். எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது எனக்கூறி உள்ளார்.

Pakistan will never ever start war with India Imran

லாகூர் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக பேசும்போது கூறுகையில், ‘எந்த பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வை கொடுக்காது என்பதை இந்தியாவுக்கு நான் கூற விரும்புகிறேன். போரில் வெற்றி பெறுபவர் கூட ஒரு தோல்வியாளர் தான். ஏனெனில் புதிய பிரச்சினைகளுக்கு போர் வழிவகுக்கும். இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம். இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன. பதற்றம் அதிகரித்தால் உலகம் ஆபத்தை எதிர்கொள்ளும்’ என்று அவர் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios