பாகிஸ்தான் அழிவை தானாக தேடிக்கொள்கிறது..!! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை..!!
தீவிரவாதத்தை வளர்ப்பது தனக்கு பாதூகாப்பு என பாகிஸ்தான் கருதுகிறது, ஒருவேலை அது தீவிரவாதத்தை நிறுத்த முற்பட்டாலும் பாகிஸ்தான் சுக்குநூறாக உடைந்துவிடும் , எனென்றால் அது வளர்த்துவரும் தீவிரவாத குழுக்களே அதை செய்துவிடுவார்கள்
இந்திய எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை யாரும் கடக்க வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் பிரமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார். அவரின் பேச்சுக்கு இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் கொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர். பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லையில் அத்து மீறி வருகிறது, இத்துடன் தன் வேலையை அது நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அந்நாட்டிற்கு அது நல்லது அல்ல என எச்சரித்தார். தேவையில்லாமல் இந்தியாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தானியர் யாரும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் செல்ல வேண்டாம் என பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில், தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால் இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை கொன்றுவிடுவர், உயிருடன் அனுப்ப மாட்டார்கள் என எச்சரித்துள்ளார்.
அதாவது, இந்தியாவில் இந்து மத ஆட்சி நடப்பதாகவும், எனவே இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் வந்தால் அவர்களை இந்தியா கொன்றுவிடும் என்ற அர்த்தத்தில் இம்ரான் அவ்வாறாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பேசிய ராஜராத் சிங். இந்தியாவில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி சிறுபான்மையின மக்கள் என அனைவரும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்து வருகின்றனர் இந்தியா சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது இனியும் அது தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை வளர்ப்பது தனக்கு பாதூகாப்பு என பாகிஸ்தான் கருதுகிறது, ஒருவேலை அது தீவிரவாதத்தை நிறுத்த முற்பட்டாலும் பாகிஸ்தான் சுக்குநூறாக உடைந்துவிடும் , எனென்றால் அது வளர்த்துவரும் தீவிரவாத குழுக்களே அதை செய்துவிடுவார்கள் என விமர்சித்தார். இது போன்ற நிலைமை நீடித்தால் பாகிஸ்தான் தன் அழிவை தானகவே தேடிக்கொள்கிறது என்று அர்த்தம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.