கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து மீது ரயில் மோதல்... 30 பேர் உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம்..!
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருந்து சர்கோதா நகரம் நோக்கி 50-க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று இரவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியை பேருந்து கடக்க முயன்றது.
பாகிஸ்தானில் ஆளில்லா ரயில்வே கேட் தண்டாவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருந்து சர்கோதா நகரம் நோக்கி 50-க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று இரவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியை பேருந்து கடக்க முயன்றது.
அப்போது ராவல் பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் பேருந்து மீது மின்னல் வேகத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ரயிலின் முன்புறம் சிக்கிக்கொண்ட பேருந்து தண்டவாளத்தில் 200 மீட்டர்கள் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு பின்னர் தூக்கி வீசப்பட்டது. இந்த கோர விபத்தில் பேருந்து மூன்று துண்டாக உடைந்தன.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 30 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக உடனே மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.