சுய நலத்திற்காக இஸ்லாமிய நாடுகளையே மிரட்டும் பாகிஸ்தான்..!! இந்தியாவை எதிர்க்க வேண்டும் என அழுத்தம்..!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது.  குறிப்பாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் பன்மடங்காக அதிகரித்துள்ளது. 

Pakistan threatens Islamic countries for self-interest, Pressure to oppose India

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது.  குறிப்பாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் பன்மடங்காக அதிகரித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கியது செல்லாது என இந்தியா அறிவிக்க வேண்டும் எனவும், இது காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனவும் இந்தியாவை எச்சரித்துவரும் பாகிஸ்தான்,  காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. மேலும் சீனாவின் உதவியுடன், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்து, அதில் தோல்வி அடைந்துள்ளது. அதேவேளையில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என்பதால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி ஒதுங்கிக் கொண்டன.

Pakistan threatens Islamic countries for self-interest, Pressure to oppose India

இந்நிலையில், இதை இஸ்லாமிய நாடுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று அந்நாடுகளை இந்தியாவுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. அதாவது ஐக்கிய அரபு அமீரகம், குவைத், துபாய், பாகிஸ்தான்,  உள்ளிட்ட 57  நாடுகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும், மேலும், அந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதாவது ஐநாவுக்கு பிறகு இரண்டாவது பெரிய அரசுகளுக்கு இடையேயான அமைப்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு செயல்பட்டு வருவதால் பாகிஸ்தான் இந்த அமைப்பை இந்தியாவுக்கு எதிராக தலையிட செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருகிறது. ஆக,  இது குறித்து பாகிஸ்தான் பலமுறை கோரிக்கை விடுத்தும் அந்த அமைப்பு அத்தகைய மாநாட்டை கூட்ட தயக்கம் காட்டி வருகிறது. 

Pakistan threatens Islamic countries for self-interest, Pressure to oppose India

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி பேசுகையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு என்பதை நாங்கள் மீண்டும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு  மரியாதையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் அதைக்கூட்ட முடியாவிட்டால், காஷ்மீர் பிரச்சினையில் எங்களுடன் நிற்கத் தயாராக இருக்கும் இஸ்லாமிய நாடுகளுடன் ஒரு கூட்டத்தை நடத்த நான் பிரதமர் இம்ரான்கானை வலியுறுத்த உள்ளேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios