பேருந்து-டீசல் லாரி நேருக்கு நேர் மோதல்... 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!
பாகிஸ்தானில் பேருந்து மீது டீசல் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் பேருந்து மீது டீசல் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பலூசிஸ்தான் நகருக்கு பேருந்து சென்றிக்கொண்டிருந்தது. பலூசிஸ்தானின் தொழில் நகரமான ஹப் அருகே டீசல் ஏற்றிக் கொண்டு லாரி சென்றிக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டீசல் ஏற்றி வந்த லாரி பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. டிரக்கில் ஈரானிய டீசல் இருந்ததால் விபத்தின்போது பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
பேருந்தில் இருந்த பயணிகள் தங்களின் உயிரை காப்பாற்ற அலறியடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது. இந்த விபத்தில் 26 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 16 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. போதிய வசதிகள் இல்லாததால் காயமடைந்தவர்களை நீண்ட தாமதத்திற்கு பின்னரே கராச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.