ஏற்கனவே எகிறி அடிக்குது இந்தியா...இதுல அமெரிக்கா உதவிவேற..?? பயத்தில் கத்திக் கதறும் பாகிஸ்தான்..!!
இந்தியா அமெரிக்கா இடையேயான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் இப் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் என குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையே செய்யப்பட்டுள்ள ராணுவ ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்க செய்யும் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது . மிக மூர்க்கத்தனமாக நடந்து வரும் இந்தியா குறித்து ஏற்கனவே இப்பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளும் உலக நாடுகளிடம் தங்களது கவலையை தெரிவித்துள்ளனர் என பாகிஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற முதல் முறையாக கடந்த 24ஆம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வந்தார்.
தனது குடும்ப உறுப்பினர்களுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்து இறங்கிய அவர் , இந்தியாவில் தாஜ்மஹால் , சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தார் . இறுதி நாளான 25 ஆம் தேதி பிரதமர் மோடி ட்ரம்ப் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் . இச்சந்திப்பின்போது இந்தியாவுக்கு 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அமெரிக்காவில் முன் வருவதாக அறிவித்தார். பின்னர் இதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தானது . இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் , இந்தியா அமெரிக்கா இடையேயான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் இப் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் என குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் ஆயிஷா ஃபருக்கி ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் இடையே நிலையற்ற தன்மை நிலவி வருகிறது , தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியற்ற சுழல் இருந்து வரும் நிலவுகிறது, இந்நிலையில் அமெரிக்கா இந்தியா இடையே போடப்பட்டுள்ள ராணுவ ஒப்பந்தம் மேலும் இப்பிராந்திய அமைதியை சீர்குலைத்து விடும் . பாகிஸ்தான் மட்டுமல்லாமல் இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளும் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் இந்தியா குறித்து உலக நாடுகளிடம் தங்களது கவலை தெரிவித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.