Asianet News TamilAsianet News Tamil

பாலகோட் பயங்கரவாத முகாம்களை மீண்டும் நிறுவிய பாகிஸ்தான்... இந்தியாவை தாக்க முயற்சி..!

இந்திய விமானப்படைநடத்திய வான்வழித் தாக்குதல்களில் அழிக்கப்பட்ட பாலகோட் பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மீண்டும் நிறுவியுள்ளது.

Pakistan re-establishes terrorist camps in Balakot ... trying to attack India
Author
Pakistan, First Published Oct 22, 2020, 12:48 PM IST

இந்திய விமானப்படைநடத்திய வான்வழித் தாக்குதல்களில் அழிக்கப்பட்ட பாலகோட் பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மீண்டும் நிறுவியுள்ளது. பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ, பாலகோட்டில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத  அமைப்பான ஜெம் கமாண்டர்களை பயன்படுத்துகிறது.

பாலகோட் பயங்கரவாத முகாம்களில் இந்திய விமானப்படை  நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஏறக்குறைய 18 மாதங்கள் ஆகியுள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானின் உளவு நிறுவனம் ஐஎஸ்.ஐ,  இந்திய மண்ணில் தாக்குதல்களைத் தொடங்க, பயிற்சி முகாம்களை மீண்டும் அங்கே தொடக்கியுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலகோட்டின் ஜெயிஷ்-ஈ-முகம்மது முகாம்களில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க உயர் மட்ட  ஜெம் கமாண்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Pakistan re-establishes terrorist camps in Balakot ... trying to attack India

பாலகோட் முகாமில் புதிதாக கட்டுப்பாட்டு அறை செயல்படுவ்து கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு உதவ, இந்த கட்டுப்பாட்டு அறைஅயை ஜெயிஷ்-ஈ-முக்கம்மது  மற்றும் பிற பயங்கரவாத குழுக்கள் பயன்படுத்துகின்றன. 

அக்டோபரில், ராஜஸ்தானில் உள்ள இராணுவ தளங்களை குறிவைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன. "பதான்கோட் தாக்குதலுக்கு இணையான ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தில் ராஜஸ்தானில் இராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்" என்று பாதுகாப்பு நிறுவன அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.Pakistan re-establishes terrorist camps in Balakot ... trying to attack India

டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் திட்டங்களை கையாள்வதற்கான பணியை ஜெய்ஷ் பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லியில் தாக்குதலைத் நடத்த பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ மவுலானா ஒருவரிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக உலகம் ஒரு போரை நடத்தும் இந்த வேளையில், ​​பயங்கரவாத குழுக்கள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள அதன் தலைவர்கள் இந்தியாவில் தாக்குதல்களை நடத்த  திட்டம் தீட்டி வருகின்றனர்.

Pakistan re-establishes terrorist camps in Balakot ... trying to attack India

தற்போது, ​​பாகிஸ்தானில் சுமார் 40,000 பயங்கரவாதிகள் உள்ளனர், அவர்களில் 16 பேர் ஐநா சபையால் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜமாஅத்-உத்-தாவா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள், இந்த இரண்டு அமைப்புகளும் உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ளன, ஆனால் அவர்கள் இன்னும் பாகிஸ்தானில் தங்கு தடையின்றி செயல்பட்டு வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios