தனிக்காட்டு ராஜாவா இந்தியா..!! இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா, பாகிஸ்தான்..!!
அதை கோத்தபய ராஜபக்சேவும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், விரைவில் அவர் பாகிஸ்தான் செல்ல இருப்பதாகவும் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் இரண்டு நாடுகளும் சமாதானமாக செல்ல வேண்டும் என இலங்கை அறிவுரை கூறியிருந்தாலும். பல விவகாரங்களில் இந்தியாவுடன் முரணான போக்கையே இலங்கை கடைபிடித்துவருகிறது. சர்வதேச அரசியல் காரணங்கள் என அது சொல்லப்பட்ட கூட இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளான, பாகிஸ்தான், சீனா, இலங்கை, ஆகிய நாடுகள் பிரச்சனை என்று வரும் பொழுது ஒரே அணியில் நிற்கக்கூடிய நண்பர்களாக உள்ளனர் என சர்வதேச அரசியல் நோக்ககர்கள் கணித்துள்ளனர்.
இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபரும் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவை பாகிஸ்தானுக்கு வருமாறு அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று கோத்தபயாவும் பாகிஸ்தான் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர், கோத்தபாய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று வரும் 29ம் தேதி கோத்தபயா இந்தியா வர உள்ளார் அதிபராக பதவியேற்ற கோத்தபய மேற்கொள்ளும் முதல் அரசு பயணம் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கோத்தபாயவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையும் சீனாவும் இணைந்து பணியாற்ற தயார் எனவும் ராஜபக்சே சகோதரர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இலங்கை இந்தியாவின் அண்டை நாடாக இருந்தாலும், நமது எதிரி நாடுகளான கருதப்படும் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இலங்கை அதிக நட்பு பாராட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இந்தியாவை விட சீனாவிடம் இலங்கை அதிக விசுவாசத்துடன் நடந்து கொள்வது நமக்கு தெரிந்த ஒன்றே. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கோத்தபய ராஜபக்சேவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் கூடியவிரைவில் ஏதுவான ஒர் நாளில் பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.