Asianet News TamilAsianet News Tamil

இப்போ பாகிஸ்தான் ரொம்ப திருந்திடுச்சி...!! வெட்கமே இல்லாமல், நல்லவர் போல் வேஷம் போட்ட இம்ரான்கான்...!!

நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் , கடந்த காலத்தில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் ஆனால் இப்போது பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களின் புகலிடம் எதுவுமில்லை. 

Pakistan prime minister imran khan acting front of UNA general secretary - about terrorism
Author
Delhi, First Published Feb 18, 2020, 2:09 PM IST

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடம் இல்லை என இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ,  கடந்த காலங்களில் எப்படிவேண்டுமானாலும் பாகிஸ்தான் இருந்திருக்கலாம் ஆனால் இப்போது இங்கு  தீவிரவாதிகளுக்கு இடமில்லை என இம்ரான் கான் கூறியுள்ளார் .  அவரின் பேச்சு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .  சமீபத்தில் மும்பை  பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் இருந்து மாயமாகி விட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.   அதேபோல் தீவிரவாதி ஹபீஸ் சையத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது . 

Pakistan prime minister imran khan acting front of UNA general secretary - about terrorism

இந்நிலையில் இவ்விரு தகவல்களை வெளியிட்ட பாகிஸ்தான்  சர்வதேச நாடுகளால் தீவிரவாதி  என அறிவிக்கப்பட்டுள்ளவரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவருமான மசூத் ஆசார் மற்றும் அவரது குடும்பத்தினர் மாயமாகி விட்டதாக பாகிஸ்தான் தெரிவித்ததுடன் பாகிஸ்தானில் சர்வதேச தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்ட 16 சர்வதேச பயங்கரவாதிகள் இருந்தனர் என்றும் , அவர்களில் 7 பேர் இறந்துவிட்டதாகவும் மற்ற ஒன்பது பேர் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து ஐநா மன்றத்தில் விண்ணப்பித்து இருப்பதாகவும்  அதில்  மசூத் அசார் மாயமாகி உள்ளார் எனவும் பாகிஸ்தான் அதிரடியாக தெரிவித்துள்ளது .  இந்நிலையில் பாகிஸ்தான் அரசு தாலிபன்,  லஷ்கர்-இ -தொய்பா ஜெய்ஷ் இ முகமது  போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு புகழிடம் அளிப்பதாக இந்தியா அமெரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

Pakistan prime minister imran khan acting front of UNA general secretary - about terrorism

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பேசியதாவது , இந்தியா. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தான் ,  தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர் . நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் ,  கடந்த காலத்தில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் ஆனால் இப்போது பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களின் புகலிடம் எதுவுமில்லை.  இப்போது எங்களுக்கு ஒரே தேவை ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவவேண்டும் என்பதே என்றார் .  இந்தக் கருத்தரங்கில் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டெரசும் கலந்துகொண்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios