ஒரு நாள் இரவில் வங்கிக் கணக்கில் ரூ. 10 கோடி; அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரி!!
திடீரென ஒருநாள் இரவில் பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி ஒருவர் கோடீஸ்வரர் ஆனார். இதையடுத்து வங்கி அவரது வங்கி ஏடிஎம் கார்டை முடக்கியது.
நமது பர்சில் அல்லது வீட்டில் திடீரென நமக்கு 100 அல்லது 1000 ரூபாய் கிடைத்து விட்டால், ஆச்சரியமாக இருக்கும். சந்தோஷம் பெருகும். வீடே பரபரப்பாக அதுகுறித்துதான் பேசும். ஆனால், ஒருவரது வங்கி கணக்கில் ரூ. 10 கோடி கிடைத்தால் எப்படி இருக்கும். பாகிஸ்தான் நாட்டில் ஆமிர் கோபாங்க் என்பவர் காவல்துறையில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது வங்கிக் கணக்கில் மாத சம்பளத்துடன், ரூ.10 கோடி கிரடிட் ஆகி இருக்கிறது. ஆனால், யார் இந்தப் பணத்தை இவரது வங்கிக் கணக்கில் சேர்த்தனர் என்பது தெரியவில்லை. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாது கதியாகிவிட்டது.
இவர் கராச்சியில் புலனாய்வு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது வங்கிக் கணக்கில் இவ்வளவு பணம் இருப்பது கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஆமிர் கோபாங்க் அளித்திருந்த பேட்டியில், ''நான் இதுவரை இந்தளவிற்கு பணத்தை பார்த்தது இல்லை. ஆதலால் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னுடைய வங்கிக் கணக்கில் சில ஆயிரம் ரூபாயைத் தவிர பெரிய அளவில் பணம் இருப்பு இருந்ததில்லை. வங்கியில் இருந்து எனக்கு அழைப்பு வந்த பின்னர்தான், வங்கியில் இவ்வளவு பணம் கிரடிட் ஆகி இருப்பது குறித்து அறிந்து கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பணத்தை எடுப்பதற்கு முன்பு அல்லது அறிந்து கொள்வதற்கு முன்பே இவரது ஏடிஎம் கார்டை வங்கி முடக்கிவிட்டது. தற்போது இவரது வங்கிக்கு எப்படி இவ்வளவு பெரிய ரொக்கம் அனுப்பப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று பாகிஸ்தான் நாட்டின் லர்கானா, சுக்கூர் ஆகிய இடங்களிலும் சில போலீஸ் அதிகாரிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லர்கானாவில் மூன்று போலீஸ் அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளுக்கு தலா ரூ. 5 கோடியும், சுக்கூரில் ஒருவரது வங்கிக் கணக்கில் ரூ. 5 கோடியும் கிரடிட் ஆகியுள்ளது.
கச்சா எண்ணெய் திருட்டு! 8 இலங்கை மாலுமிகள் அடங்கிய கப்பலை சிறைபிடித்த நைஜீரியா