எங்களுக்கு ஒரு அடினா... இந்தியாவுக்கு 2 மடங்கு அடி... கொக்கரிக்கும் பாகிஸ்தான்..!
நாட்டின் எல்லையில் வான்வெளிகளை மூடியதால், பாகிஸ்தானுக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் எல்லையில் வான்வெளிகளை மூடியதால், பாகிஸ்தானுக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள், காஷ்மீர் புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படையின், போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, பாலக்கோட்டில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்களை தகர்த்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்தது.
இதனால் பாகிஸ்தானில் உள்ள, 11 வான்வெளிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் சர்வதேச விமானங்கள், நீண்ட துாரம் சுற்றிச் சென்றன. இதனால் ஏர் இந்தியாவுக்கு ரூ.491 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நான்கரை மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த 16 ஆம் தேதி அதிகாலை பாக்.,வான்வெளி பாதைகள் திறக்கப்பட்டன.
இது தொடர்பாக, கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை அமைச்சர், குல்காம் சர்வார் கான்,”வான்வெளிகளை மூடியதால், பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறைக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய இழப்பு. ஆனால், இந்தியாவுக்கு, இதைவிட இருமடங்கு இழப்பு ஏற்பட்டு இருக்கும். இதுபோன்ற தருணங்களை தடுக்க, இணக்கமாக நடந்து கொள்வது இரு நாடுகளுக்கும் அவசியம்’’ என்று அவர் கூறினார்.