pakistan lawyer replaced in kulbhushan jadhav case
தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்தியர் குல்புஷன் ஜாதவுக்கு எதிரான வழக்கில் பாகிஸ்தான் தரப்பு வழக்கறிஞர் திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அந்நாட்டின் தலைமை வழக்கறிஞர் அஸ்தார் அசுப் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
மரண தண்டனை
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
தடை
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கடந்த 18-ந்தேதி உத்தரவிட்டது.

நீக்கம்
இந்த வழக்கில் பாகிஸ்தான் தரப்பில் இங்கிலாந்தைச் சேர்ந்த கவார் குரேஷி ஆஜரானார். ஆனால், இவர் வழக்கை மிக மோசமாக கையாண்டார், ஆதாரங்களை சரியாக எடுத்துவைக்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சகம் குற்றம்சாட்டி அவரை நீக்கியுள்ளது.
தீவிர ஆலோசனை
அதற்கு பதிலாக பாகிஸ்தானின் தலைமை வழக்கறிஞர்
அஸ்தார் அசுப் அலி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இஸ்லாமாபாதில்அட்டர்னி ஜெனரல் அஸ்தார் அசுப் அலி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ இந்திய குல்புஷன் யாதவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வாதிடும்போது, அரசின் ஆலோசனைகள் பெற்று, அனைத்து அதிகாரிகளுடன் விவாதித்து, குறிப்பாக ராணுவத்துடன் ஆலோசித்தே வாதிடப்பட்டது.
ஏன் ஏற்க வேண்டும்?
ஆனால், எதற்காக பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க வேண்டும். கடந்த 1960ம் ஆண்டு செப்டம்பர் பாகிஸ்தான் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின்படி, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை எந்தவித நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளும். ஆனால், 2017ம் ஆண்டு மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, விதிவிலக்குகள், ஒதுக்கீடுகள், நிபந்தனைகளுடனே ஏற்போம் எனக் கூறப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தாது
இந்திய அரசு வியன்னா ஒப்பந்தத்தை காரணம் காட்டி சர்வதேச நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் வியன்னா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன. ஆனால், சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரம் எனது, அதன் உறுப்பு நாடுகளை மட்டுமே கட்டுப்படுத்தும் பாகிஸ்தானை கட்டுப்படுத்தாது’’ எனத் தெரிவித்தார்.
