தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்களை கைது செய்த போலிஸாரை கடுமையாக சாடிய இஸ்லாமாபாத் நீதிபதி இந்தியாவை விமர்சித்து பேசியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்களை கைது செய்த போலிஸாரை கடுமையாக சாடிய இஸ்லாமாபாத் நீதிபதி இந்தியாவை விமர்சித்து பேசியுள்ளார்.
பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்துள்ள நீதிமன்றம் “இது பாகிஸ்தான், இந்தியாவல்ல”என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மக்கள் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களிலோ, பொது வெளியிலோ ஏதேனும் கருத்து தெரிவித்தால், போரட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாக அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது பா.ஜ.க. அரசு. இந்நிலையில், பாகிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததற்கு அந்நாட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் தலைவர் மன்சூர் பஸ்தீன் கடந்த மாதம் 28ம் தேதி இஸ்லாமாபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது கைதை கண்டித்து அவாமி தொழிலாளர்கள் கட்சி மற்றும் பஸ்தூன் தஹாஃபுஸ் இயக்கத்தைச் சேர்ந்த 23 பேர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரையும் இஸ்லாமாபாத் போலிஸார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதான அனைவரும் ஜாமின் கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த ஜாமின் மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் தலைமை நீதிபதி அதார் மினல்லா, ’’மன்சூர் பஸ்தீன் ஆதரவாளர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினருக்கு கண்டனமும் தெரிவித்தார். “போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது சுலபமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய இது ஒன்றும் இந்தியா அல்ல. பாகிஸ்தான். ஒரு ஜனநாயக நாட்டில் போராடும் உரிமை மக்களுக்கு உண்டு. மக்களின் ஒவ்வொரு அரசியலமைப்பு உரிமைகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் பாதுகாக்கும்” கடிந்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 19, 2020, 11:16 AM IST