பாக். அமைச்சர் பிலாவல் இந்திய வருகை எதிரொலி... பாக். சிறைகளில் இருந்து 600 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு!!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்திய வருகை எதிரொலியாக, அந்நாட்டு சிறைகளில் உள்ள 600 இந்திய மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

pakistan has decided to release 600 Indian fishermen on the occasion of bilawals india visit

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்திய வருகை எதிரொலியாக, அந்நாட்டு சிறைகளில் உள்ள 600 இந்திய மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்திய வருகை எதிரொலியாகவும், நல்லிணக்க நடவடிக்கையாகவும் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 600 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா: மன்னர் சார்லஸ், ராணி கமிலாவிற்கு ஆடை தயாரித்த இந்தியப் பெண் யார்?

அதன் ஒரு பகுதியாக வரும் 12 ஆம் தேதி முதற்கட்டமாக 200 மீனவர்களும், 14 ஆம் தேதிக்குள் மற்ற அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, 705 இந்திய குடிமக்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 654 பேர் மீனவர்கள். இதேபோல், மொத்தம் 434 பாகிஸ்தானியர்கள் இந்திய காவலில் உள்ளனர், அவர்களில் 95 பேர் மீனவர்கள் என்று கூறப்படுகிறது. இரு நாட்டு மனித உரிமை அமைப்புகளும் மீனவர்களைக் கைது செய்யக் கூடாது என்ற கொள்கையை அரசுக்கு பலமுறை வலியுறுத்தி வருகின்றன.

இதையும் படிங்க: குட் நியூஸ்!.. கொரோனா தொற்று இனி அவசரநிலை கிடையாது.. WHO வெளியிட்ட சூப்பர் தகவல்

இந்த நிலையில், சிறையில் உள்ள மீனவர்களின் அவல நிலையை எடுத்துரைத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHCR) தலைவர் ரபியா ஜாவேரி ஆகா மே 1 ஆம் தேதி தொடங்கினார். இந்த நடவடிக்கை மனித உரிமை அமைப்புகளால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது, மேலும் இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் மீனவர்கள் தடுப்புப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாடுகளும் முயற்சிக்கும் என்று நம்பப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios