பாகிஸ்தானியர்களின் கனவில் கூட இந்தியாதான்..!! ஆயிஷா பாருக்கியின் நீலிக்கண்ணீர் ட்ராமா..??
ஜம்மு காஷ்மீர் மக்கள் மருத்துவ உதவிகள் இன்றி தவிக்கின்றனர் , கொரோனா தடுப்பிற்கு அங்கு போதிய வசிதிகள் செய்து தரப்பட வில்லை என வாய்க்கு வந்தபடி மீண்டும் இந்தியாவுக்கு எதிராக அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார்.
இந்திய மாநிலங்களில் ஒன்றான காஷ்மீரில் போதிய மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் மக்கள் துன்பத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் காஷ்மீர் மக்களின் நிலையை எண்ணி பாகிஸ்தான் கவலை கொள்வதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஆயிஷா பாரூக்கி நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். காஷ்மீரில் 170 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்தியா மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார் , அதாவது பல ஆண்டுகாலமாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், அதை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டில் இணைத்துக்கொண்டது, அதுமட்டும் அல்லாமல் லடாக் காஷ்மீரில் என இரண்டு மாநிலங்களாக பிரித்து அறிவித்ததுடன், காஷ்மீர் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான் இதை சீனாவின் உதவியுடன் ஐநா மன்றம் வரை கொண்டு சென்று காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க முயன்றது, ஆனால் அதில் பாகிஸ்தானுக்கு தோல்வியே கிடைத்தது , ஆனாலும் எப்போதொல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் வாரி இறைத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ஆயிஷா பாரூக்கி , தற்போது இந்தியா மீது விஷத்தை கக்கி உள்ளார். பாகிஸ்தான் நாட்டு ஆங்கில ஊடகங்களை அழைத்தும் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் .
இவரின் குற்றச்சாட்டுக்கு இந்தியா சார்பில் பலமான பதிலடி கொடுக்கப்பட்டு வந்த போதிலும் அவர் இந்தியாவுக்கு எதிராக குற்றசாட்டுகளை தொடர் பிரச்சாரமாக முன்னெடுத்து வருகிறார். தற்போது அவர் கூறும் புதிய குற்றச்சாட்டு , கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் காஷ்மீரில் இந்தியா போதிய பாதுகாப்பு வசதிகளை செய்து தரவில்லை என்பது தான் அது, இந்நிலையில் அவசரமாக செய்தியாளர்களை சந்தித்துள்ள அவர், ஜம்மு காஷ்மீர் மக்கள் மருத்துவ உதவிகள் இன்றி தவிக்கின்றனர் , கொரோனா தடுப்பிற்கு அங்கு போதிய வசிதிகள் செய்து தரப்பட வில்லை என வாய்க்கு வந்தபடி மீண்டும் இந்தியாவுக்கு எதிராக அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். இது மட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர் அல்லாதவர்களை இந்தியா தொடர்ந்து குடியேற்றம் செய்து வருகிறது இது அங்குள்ள பூர்வ குடி மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என ஒரு குற்றம்சாட்டியுள்ளார் அவர்.
ஆனால் இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா இந்திய மக்கள் குறித்து பாகிஸ்தான் கவலைபடத்தேவையில்லை, எங்களை மக்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும் என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது. அதேபோல் வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் உள்ள பாகிஸ்தானியர்களை திரும்பவும் பாகிஸ்தான் அழைத்து வருவது குறித்து விரிவான ஆலோசனை நடந்து வருவதாக தெரிவித்துள்ள ஆயிஷா பாரூக்கி, விரைவில் சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் . சீனாவில் வுஹான் நகரில் வைரஸ் வேகமாக பரவியபோது அங்கிருந்த பாகிஸ்தான் மாணவர்களை கவனமாக பார்த்துக் கொண்ட சீன அரசுக்கு எனது நன்றி என அவர் கூறியுள்ளார்.