தீவிரவாதிகளுக்கு தகவல் கொண்டு வந்த பாகிஸ்தான் புறா..!! இந்திய பாதுகாப்பு படை வீரர்களிடம் சிக்கியது..!!
உலகமே கொரோனவைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது . ஆனால் இந்தியாவோ தன் எல்லையில் எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.
எல்லையில் ஒருபுறம் சீனாவுடனும் மறுபுறம் பாகிஸ்தானுடனும் நாட்டைப் பாதுகாக்க இந்தியா போராடி வரும் நிலையில், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சில ரகசிய தகவல்களை தாங்கி, புறா ஒன்று ஊடுருவிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த ஒரு துண்டுச் சீட்டில் சில ரகசிய குறியீடுகள் இடம்பெற்றிருந்தது இந்திய பாதுகாப்பு படையினரை சந்தேகம் அடைய வைத்துள்ளது. உலகமே கொரோனவைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது . ஆனால் இந்தியாவோ தன் எல்லையில் எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்தி எப்படியாவது இந்தியாவுக்குள் நுழைந்துவிட வேண்டும் என பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் வேட்டை விலங்காக காத்திருக்கின்றனர். இந்திய பாதுகாப்பு படையினர் கண்கொத்தி பாம்பாக இருந்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் தீவிரவாத சதிகளையும் முறியடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் சர்வதேச எல்லையான மணியாரி என்ற கிராமத்திற்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த புறாவின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அந்தப் புறாவின் காலில் ஒரு துண்டு சீட்டு கட்டப்பட்டிருந்ததால், பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர் . கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய எல்லைக்குள் வந்த அந்த புறாவை உள்ளூர் மக்கள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களிடம் ஒப்படைத்தனர் . பின்னர் அது SDPO எல்லையில் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் புறா எங்கிருந்து வந்தது , அதன் காலில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது குறித்து இந்திய பாதுகாப்பு படையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். புறா எல்லைக்குள் ஊடுருவியதுகுறித்து தெரிவித்துள்ள ராணுவ அதிகாரி ஒருவர் புறாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, அதன் காலில் சைகை மொழியில் எழுதப்பட்ட ஒரு செய்தி குறிப்பு உள்ளது. அது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த தகவலை டிகோட் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . ஒருவேளை அது தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்ட செய்தியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து பாதுகாப்பு படையினர் எல்லையில் உள்ள மலைப்பிரதேசம் மற்றும் காடுகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எந்தவிதமான அசாதாரண அறிகுறிகளும் அங்கு தென்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சிலர் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்துள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு அமைப்புகள் இப்பகுதியை உன்னிப்பாக கவனித்து வருகின்றன . இந்நிலையில் மே-16ஆம் தேதி முதல் மாவட்டத்தில் எல்லைப் பகுதிகளை நோக்கி பாயும் நதி மற்றும் வடிகால்களில் ராணுவம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல்லையை நோக்கி பாயும் நதி, வடிகால்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பாபர் நல்லா பகுதி முன்பு கடத்தல்காரர்களுக்கு முக்கிய பாதையாக இருந்தது. பின்னர், இந்த வழியில் ஊடுருவல்கள் தொடங்கியது என வந்த தகவலையடுத்து, இராணுவம் இந்த பகுதியில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.