கொரோனாவில் இந்தியாவை விஞ்சியது பாகிஸ்தான்... 184 பேருக்கு பாதிப்பு..!
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 853 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 ஆயிரத்து 729 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஈரானுடன் சுமார் 900 கிலோ மீட்டர்கள், ஆப்கானிஸ்தானுடன் 2 ஆயிரத்து 600 கிலோ மீட்டர்கள் அளவுக்கு எல்லைகளை பகிரும் பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது இந்தியாவில் 125 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், எதிரி நாடான பாகிஸ்தானில் 184 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 145-க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7157 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 125 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், 2 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 853 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 ஆயிரத்து 729 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஈரானுடன் சுமார் 900 கிலோ மீட்டர்கள், ஆப்கானிஸ்தானுடன் 2 ஆயிரத்து 600 கிலோ மீட்டர்கள் அளவுக்கு எல்லைகளை பகிரும் பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பாகிஸ்தானில் இதுவரை 184 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டியில் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.