இரண்டு பேருந்துகள் மோதி விபத்து... 19 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Pakistan bus collision...19 people killed

பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Pakistan bus collision...19 people killed

பாகிஸ்தான் நாட்டின் டிஜி கான் நகரில் இருந்து தங்கள் சொந்த ஊரான முல்தானுக்கு இரண்டு பேருந்துகளில் சுமார் 70 பேர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேருந்துகளும் காஸி காட் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன.  

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் இறந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. Pakistan bus collision...19 people killed

பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் பலியானது குறித்து அறிந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் பலியானோர் குடும்பத்துக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios