பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சிலாஸ் மாவட்டத்தில் சென்றபோது திடீரென பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், மலையில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சத்பவ இடத்திலேயே 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 26 பேர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.