கோழியை கற்பழித்து கொன்ற சிறுவன்..! பாகிஸ்தானில் பயங்கரம்..!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கோழியை கற்பழித்ததாக சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜலல்பூர் பட்டியான் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மன்சாப் அலி. இவர், காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்சார் ஹூசைன் என்ற 14 வயது சிறுவன், கடந்த 11ம் தேதி தனது கோழியை கடத்தி சென்று பாலியல் உறவு கொண்டு கொன்றுவிட்டதாக புகார் அளித்தார்.
இந்த புகாரைக் கண்டு சற்றே அதிர்ச்சியடைந்தாலும் புகாரை எடுத்துக்கொண்டு போலீசார் விசாரணையில் அந்த சம்பவம் உண்மைதான் என்பது கண்டறியப்பட்டது. ஹூசைன் என்ற அந்த சிறுவன், கோழியுடன் உறவு கொண்டதை நஸ்ருல்லா, துபைல் என்ற இருவா் நேரில் பாா்த்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடா்ந்து அந்த கோழியை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திய போது, கோழியுடன் ஹூசைன் உறவு கொண்டது உண்மைதான் என்று மருத்துவா்களும் உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுவன் மீது இயற்கைக்கு மாறான குற்றம் புரிந்த பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
தனது தவறை ஒப்புக்கொண்ட ஹூசைன், பாலியல் உணா்வை கட்டுப்படுத்த முடியாமல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு விட்டதாக தெரிவித்துள்ளான்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.