பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் காணாமல் போனதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்திய ஊடகங்கள் அவர் 'செயலில் காணாமல் போயுள்ளார்' என்று செய்தி வெளியிட்டுள்ளன, மேலும் அவர் பதுங்கு குழியில் மறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Pakistan Army Chief General Syed Asim Munir missing: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் இந்தியா 26 அப்பாவி உயிர்களை இழந்த பிறகு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் காணாமல் போய் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. உள்ளூர் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, பல இந்திய ஊடகங்கள் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் 'செயலில் காணாமல் போயுள்ளார்' (MIA) என்று செய்தி வெளியிட்டன. Asianet News இதுகுறித்து தனிப்பட்ட வகையில் விசாரிக்க முடியாவிட்டாலும் வெளியாகி இருக்கும் தகவல்களை வைத்து இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

பதுங்கு குழியில் சையத் அசிம் முனீர்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பஹல்காம் சம்பவத்திற்குப் பின்னர் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ஜெனரல் முனீர் ராவல்பிண்டியில் உள்ள ஒரு பதுங்கு குழியில் மறைந்திருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பைசரன் பள்ளத்தாக்கு தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. பாகிஸ்தானின் ஈடுபாட்டை உளவுத்துறை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நான்கு போர்களில் இருந்து தப்பிய ஒரு ஒப்பந்தமாகும் இது. இந்த நடவடிக்கையை "சட்டவிரோதமானது" என்று பாகிஸ்தான் கூறியது, இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் மாயம்; ராணுவத்தினர் ராஜினாமா!!

காஷ்மீர் குறித்து ஜெனரல் முனீர் சர்ச்சைக்குரிய பேச்சு:

காஷ்மீர் குறித்து ஜெனரல் முனீர் முன்பு சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டார். பஹல்காம் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் காஷ்மீரை பாகிஸ்தானின் "கழுத்து நரம்பு" என்று குறிப்பிட்டார். கைபர் பக்துன்க்வாவின் உள்ள பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடந்த ஒரு பயிற்சி அணிவகுப்பின் போது - பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தால் பகிரப்பட்ட இந்த நிகழ்வின் புகைப்படங்கள் முனீர், ''இந்துக்களும் முஸ்லிம்களும் "ஒவ்வொரு அம்சத்திலும் தனித்துவமானவர்கள்" என்று கூறி, பிளவுபடுத்தும் "இரு தேசக் கோட்பாட்டை" மீண்டும் வலியுறுத்தி இருந்தார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்குத் தடை

பாகிஸ்தான் ராணுவத்தினர் ராஜினாமா:

இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவம் உள்நாட்டு நெருக்கடியை எதிர்கொள்கிறது. முன்பு இல்லாத வகையில் இந்திய ராணுவத்தின் எதிர்வினை குறித்த அச்சத்தால் சுமார் 5,000 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இரண்டு நாட்களுக்குள் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல வீரர்களின் குடும்பங்கள், உடனடி இந்தியத் தாக்குதலுக்கு அஞ்சி, தங்களது குடும்ப உறுப்பினர்களை ராணுவத்தில் இருந்து வெளியேறு கூறுவதாக செய்தி வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் சிலர் தங்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளால் பதவி விலகுகின்றனர். பல வீரர்கள் ஏற்கனவே வீடு திரும்பியுள்ளதாகவும், இன்னும் பலர் விரைவில் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையால் பீதியடைந்த பாகிஸ்தானின் 11வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உமர் புகாரி, ராணுவத்தினரின் மன உறுதி சரிந்து வருவதாக எச்சரித்து ஜெனரல் முனீருக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதல்: பாபா வங்காவின் கணிப்புகள் பலிக்குமா?

ராணுவ நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு இல்லை.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க இந்திய ராணுவம் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் இயக்கங்களை நேரடியாக ஒளிபரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணியாளர்களும் பாதிக்கப்படலாம். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவது கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (திருத்தம்) விதிகள், 2021 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை தெரிவித்துள்ளது.

அடில் அகமது தோகர்

26 சுற்றுலாப் பயணிகளின் படுகொலைக்கு வழிவகுத்த பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட அடில் அகமது தோகர், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் கல்வி என்ற பெயரில் பாகிஸ்தானுக்குச் சென்று பயங்கரவாதியாகத் திரும்பியதாக அறியப்படுகிறது. மேலும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Scroll to load tweet…

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் இறுதியாக பிரதமர் முஹம்மது ஷெபாஸ் ஷெரீப்புடன் அபோதாபாத்தில் நடைபெற்ற பட்டம் அளிப்பு விழா ஒன்றில் அதிகாரிகளுடன் குழு புகைப்படம் ஏப்ரல் 26, 2025, எடுத்துக் கொண்டுள்ளார்.