Srilanka Crisis : இலங்கைக்கு உதவ முன்வந்த பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகள்! வெளி விவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு மேலும் 4 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளி விவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சீனாவிடம் கடன் பெற்ற இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. ஆதிபர் மாற்றம், ஆட்சி கவிழ்ப்பு என பல இன்னல்களை கடந்து மீண்டும் ஒரு நிலையான ஆட்சியை அமைத்து வருகிறது.
இந்நிலையில், இலங்கையின் நிதி நெருக்கடியை சமாளிக்க இந்தியா, பாரீஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உதவி வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி உத்தரவாதம் அளிக்க சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி, குவைத் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன.
இது குறித்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி, குவைத் ஆகிய நாடுகள் இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) நிதி உத்தரவாதம் வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி இது குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்கிய இந்தியா, பாரிஸ் கிளப் நாடுகள் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் மீண்டும் ஒருமுறை அலி சப்ரி நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிரான இலங்கை ரூபாய் மதிப்பை உயர்த்த அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!!