2021-ம் ஆண்டில் இந்தியாவின் இஸ்ரோ, விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதேபோல பாகிஸ்தானும் திட்டமிட்டு வருகிறது

இந்த திட்டம் குறித்து அந்தநாட்டின் தொழில்நுட்ப அமைச்சர் சவுத்ரி பவத் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “ நாங்கள் விண்ணுக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இதற்காக சீனாவின் உதவியை நாடி இருக்கிறோம். விண்வெளிக்குச் செல்லும் வீரர்களை அடுத்த ஆண்டு தேர்வு செய்ய இருக்கிறோம். 

முதல்கட்டமாக 50 வீரர்களும், அடுத்து அவர்களில் 25 பேரும், அந்த 25 பேரில் ஒருவரை மட்டும் தேர்வு செய்வோம். எங்களின் இந்த பணிக்கு விமானப்படை துணை செய்யும். 1963-ம் ஆண்டு ரஷியா ராக்கெட் அணுப்பியபின் தெற்கு ஆசியாவில் ராக்கெட் அனுப்பிய நாடு நாங்கள்தான்” எனத் தெரிவித்துள்ளார்.