பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF, பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவது மற்றம் சட்ட விரோத பணபரிவர்த்தனை ஆகியவற்றை தடுப்பதற்காக ஆசிய – பசிபிக் குழுமம்  நிர்ணயித்துள்ள 40 விதிகளில் 32 விதிகளை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்ற FATF மற்றும் APG ஆகியவற்றின் ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்கலாமா என்பது பற்றி 7 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நிதி அமைப்பான FATF இடம் இருந்து பாகிஸ்தான் நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து கறுப்பு பட்டியலில் இருப்பதை தடுக்க 2019-ஆம் அக்டோபர் மாதத்திற்குள் பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் சர்வதேச அமைப்புக்களிடம் இருந்து பாகிஸ்தான் நிதி பெற முடியாத நிலை ஏற்படும்.