7 மாதங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான முறை எல்லையில் அத்து மீறிய பாக் ராணுவம்: உச்சகட்ட கொந்தளிப்பில் இந்தியா
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் ஜம்மு-காஷ்மீரில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பெண்கள் குழந்தைகள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் பயனடைந்துள்ளனர்.
கடந்த ஏழு மாதங்களில் பாகிஸ்தான் 3 ஆயிரத்திற்கும் அதிகமான முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் அத்து மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், தீவிரவாதிகளை ஊடுருவ முயன்றது என, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையில் பாகிஸ்தான் தூதர் மொயின்-உல்-ஹக் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டி கட்டுரை எழுதியுள்ளார். அவருக்கு இந்திய தூதரகம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதுடன், அது முழுவதும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதை கடுமையாக எதிர்த்து வரும் பாகிஸ்தான், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. அத்துடன் காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருவதுடன், இந்த விவகாரத்தை ஐநா மன்றம் வரை கொண்டுசென்று சர்வதேச பிரச்சினையாக்க முயற்சித்து அதில் தோல்வி அடைந்துள்ளது.
மேலும் சீனாவின் உதவியுடன் தொடர்ந்து ஐநாவில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயற்சித்து வருகிறது. பாகிஸ்தாட் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸில், அந்நாட்டிற்கான பாகிஸ்தான் தூதர் மொயின் - உல்-ஹக் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் உடனே தலையிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அவரது கட்டுரைக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய தூதரகம். பாகிஸ்தான் தனது பொய்களை தொடர்ந்து கூறி வருவதாகவும், அதேபோல் ஜம்மு காஷ்மீர் குறித்து முழு உண்மையையும் சொல்ல வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து, காஷ்மீரின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பொய்களையும், அரை குறை தகவல்களையும் கூறி வருகிறது. 2019 ஆகஸ்ட்-5 அன்று 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து, ஜம்மு காஷ்மீர் வேகமாக வளர்ந்து வருவதை மொயின்-உல்-ஹக். மறைத்துள்ளார்.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் ஜம்மு-காஷ்மீரில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பெண்கள் குழந்தைகள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் பயனடைந்துள்ளனர். 50 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, 5 லட்சம் காஷ்மீர் மாணவர்கள் உதவித்தொகை பெற்றுள்ளனர், சுமார் 70 ஆண்டுகளில் நடைபெறாத பணிகள் தற்போது நடந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் அரசு 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. கூடுதலாக 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை கொண்டு வருவதற்கு சுமார் 150 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 3 லட்சம் வீடுகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பாகிஸ்தானில் அதிகரித்துவரும் உறுதியற்ற தன்மையால், ஜம்மு காஷ்மீரில் அமைதியற்ற குலைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டின் கடைசி ஏழு மாதங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை ஊடுருவ முயற்சித்ததுடன், இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது என இந்திய தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.