நான் 16 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டும், வெளியே சொல்லவில்லை... மாடல் அழகி பகீர் தகவல்!

தான் 16 வயதாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்று தொலைக்காட்சி நடிகையும், எழுத்தாளரும், மாடலுமான பத்மா லட்சுமி தெரிவித்துள்ளார்.

Padma Lakshmi... opens up about childhood abuse

தான் 16 வயதாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்று தொலைக்காட்சி நடிகையும், எழுத்தாளரும், மாடலுமான பத்மா லட்சுமி தெரிவித்துள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக முன்மொழியப்பட்ட நீதிபதி பிரட் காவானாக் மீது சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அது தொடர்பாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பத்மா லட்சுமி கட்டுரை எழுதியுள்ளார். Padma Lakshmi... opens up about childhood abuse

அதில் தான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பலவிஷயங்களை அதில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு 7 வயதாக இருந்த போது என்னை இந்தியாவில் உள்ள என்னுடைய தாய் வீட்டுக்கு விடுமுறைக்குச் சென்றேன். அங்கு எனது தாத்தா, பாட்டி வீட்டில் தங்கினேன். அப்போது அங்கிருந்த எனது தூரத்து உறவினர் ஒருவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார், பாலியல் ரீதியாகவும் என்னை வன்புணர்வு செய்தார். இது குறித்து நான் தாயிடமும், என் வளர்ப்புத் தந்தையிடமும் கூறியபோது, வாயை மூடு, ஏதாவது பேசினாய் என்றால், நீ வெளியேற்றப்படுவாய்  என்றனர்.

Padma Lakshmi... opens up about childhood abuse

அதன்பின், எனக்கு 16 வயதாக இருந்தபது, 23 வயது அழகிய இளைஞரோடு நான் டேட்டிங் சென்றேன். சில மாதங்கள் தான் அவனிடம் நான் பழகினேன் ஆனால், ஒரு நாள் நான் தூக்கத்தில் இருந்தபோது என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். என்னை ஒருநாள் பள்ளியில் இருந்து அழைத்து வேறு எங்கோ அழைத்துச் சென்று இரவு நேரத்தில் வீட்டுக்கு அந்த இளைஞன் அழைத்துவந்தான். என் தாயிடம் என்னை ஒப்படைத்துவிட்டு சென்றான். அவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால், இதேபோன்று ஒருநாள் அந்த இளைஞருடன் வெளியே சென்றுவிட்டு அவன் வீட்டில் தனிமையில் தங்க நேர்ந்தது. அதிகாலையில் விழித்துப் பார்த்தபோது நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தேன், அதற்கான அனைத்து அடையாளங்களும் என் உடலில் இருந்தன.

எனக்கு அந்த நேரத்தில் டேட்டிங், பலாத்காரம் என்பது குறித்து தெரியாது. அந்த சம்பவம் எனக்கும் அந்த இளைஞருக்கும் நடந்த பாலுறவா அல்லது நான் பலாத்காரம் செய்யப்பட்டேனா என்பதைக் கூட அப்போது என்னால் பிரித்துப்பார்க்க முடியவில்லை. ஆனால், அதன்பின் என் வாழ்க்கையில் வந்த பல ஆண் நண்பர்களிடம் நான் கன்னித்தன்மை உடைய பெண் என்று பெருமையாகக் கூறிக்கொண்டேன். இப்போதும் அப்படியே கூறுகிறேன். Padma Lakshmi... opens up about childhood abuse

நாம் குறிப்பிட்ட நேரத்துக்குள் பாலியல் தாக்குதல் குறித்த எந்த உண்மையையும் நாம் கூறாததால், நாம் ஏாளமானற்றை இழந்துவிட்டோம். நாம் நீண்ட காலமாக அமைதி, பொறுமை என்கிற விஷயத்தை கையில் பிடித்துக்கொண்டு, பெண்களை பாலியல் ரீதியாக ஆண்கள் தாக்குதல் நடத்த தொடர்ந்து அனுமதிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios