Asianet News TamilAsianet News Tamil

119 ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்த புத்தகம்! அமெரிக்க நூலகத்தில் நிகழ்ந்த அதிசயம்!

அமெரிக்க பொது நூலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட An Elementary Treatise on Electricity என்ற அறிவியல் வரலாற்றுப் புத்தகம் 119 ஆண்டுகளுக்குப் பின் அந்த நூலகத்தில் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

Overdue Book Returned To US Library 119 Years Later
Author
First Published Jul 10, 2023, 11:03 AM IST

ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (James Clerk Maxwell) எழுதிய மின்சாரத்தின் வளர்ச்சி குறித்த "ஆன் எலிமெண்டரி ட்ரீடிஸ் ஆன் எலக்ட்ரிசிட்டி" (An Elementary Treatise on Electricity) என்ற புத்தகம் 1904 இல் மாசசூசெட்ஸில் உள்ள நியூ பெட்போர்ட் பொது நூலகத்தில் இருந்து இரவல் பெற்றப்பட்டது. 1882ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் 119 ஆண்டுகளுக்குப் பின் நூலகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்துள்ளது.

மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரியும் அரிய புத்தகங்களின் கண்காணிப்பாளரான ஸ்டீவர்ட் ப்ளீன், பல நூற்றாண்டுகள் பழமையான இந்த அறிவியல் புத்தகத்தைக் கண்டுபிடித்துள்ளார். அதில் நூலகத்தின் ஸ்டிக்கர் அப்படியே இருப்பதைக் கவனித்த அவர், அதை நூலகத்துக்குத் திருப்பி அனுப்ப முடிவு செய்தார்.

வட மாநிலங்களைப் புரட்டிப் போடும் வெள்ளப் பெருக்கு: தத்தளிக்கும் இமாச்சல், டெல்லி மக்கள்!

ஸ்டீவர்ட் ப்ளீன் நியூ பெட்போர்ட் பொது நூலகத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, புத்தகத்தை அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து நியூ பெட்போர்ட் நூலகம் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

"நூலகப் புத்தகத்தைத் திருப்பித் தருவதற்கு இதுகூட தாமதம் இல்லை. இன்று, மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழக நூலகத்தின் அரிய புத்தகக் காப்பாளர் நூலகத்திற்கு வந்த நன்கொடைகளில் எமது நூலகத்தின் புத்தகத்தைக் கண்டறிந்துள்ளார் - ஏறக்குறைய 120 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துச் செல்லப்பட்ட புத்தகம்!" என்று நூலகத்தின் பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பணக்காரக் குடும்பங்கள்... தமிழ்நாட்டுக்கு 2வது இடம்! ஆய்வில் தகவல்

ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் எழுதிய "அன் எலிமெண்டரி ட்ரீடைஸ் ஆன் எலக்ட்ரிசிட்டி" (An Elementary Treatise on Electricity) என்று தலைப்பிடப்பட்ட புத்தகம், #NewBedford க்கு திரும்பியுள்ளது என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூ பெட்ஃபோர்ட் நூலகத்தில் ஒரு நாளுக்கு 5 சென்ட் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, 119 வருட காலதாமதக் கட்டணம் 2,100 டாலருக்கும் அதிகமாக இருக்கவேண்டும். ஆனால் அதிகபட்ச தாமதக் கட்டணம் 2 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பேரணியை தோற்கடித்த இந்திய ஆதரவாளர்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios