கொரோனாவின் கோடூரத் தாக்குதல்... அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்..!

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 12 லட்சம் குழந்தைகள் அடுத்த 6 மாதங்களில் உயிரிழக்கக் கூடும் என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் வெளியிட்டுள்ளது.
 

Over 12 lakh children are at risk of dying in the next 6 months

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 12 லட்சம் குழந்தைகள் அடுத்த 6 மாதங்களில் உயிரிழக்கக் கூடும் என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் வெளியிட்டுள்ளது.

கொரோனா உலகம் முழுவதும் பாதித்து கொத்துக்கொத்தாய் மக்கள் மடிந்து வருகின்றனர்.  பலவேறு நாடுகளில் ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாததால் மேலும் மேலும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார பள்ளி அமைப்பின் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கமான சுகாதார சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தை பிறப்பு, சிசு பாதுகாப்பு, நோய்த் தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Over 12 lakh children are at risk of dying in the next 6 months

பல நாடுகளில் பள்ளிகள் மூலமாகத் தான் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், தற்போது அவை மூடப்பட்டுள்ளதால் முறையாக உணவின்றி தவிப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் பெரும் அபாயத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்.Over 12 lakh children are at risk of dying in the next 6 months

அடுத்த 6 மாதங்களில், 5 வயதிற்குட்பட்ட12 லட்சம் குழந்தைகள் வழக்கத்தை விட கூடுதலாக உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பிரேசில்,பாகிஸ்தான், நைஜீரியா, மாலி மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் உயிரிப்பு அதிகளவில் இருக்கும் எனவும்  ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios