ஈரகொலையை நடுங்க வைக்கும் ஈரானின் முடிவு... அமெரிக்கா அலறும் அளவிற்கு எங்கள் முடிவு இருக்கும்..!
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர். இதனால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பழிக்கு பழி வாங்குவோம் என்று ஈரான் கூறி வரும் நிலையில், நாங்கள் 52 இடங்களை குறிவைத்துள்ளோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுடைய முடிவு அமெரிக்கா வருந்தும் அளவிற்கும் இருக்கும் என ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால், வளைகுடா நாட்டில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர். இதனால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பழிக்கு பழி வாங்குவோம் என்று ஈரான் கூறி வரும் நிலையில், நாங்கள் 52 இடங்களை குறிவைத்துள்ளோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவுசாவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பாஸ் மவுசாவி கூறுகையில் "அமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக உள்ளோம். தளபதி கொல்லப்பட்டதற்கு தெஹ்ரான் பழிக்குழி வாங்கியே தீரும். அதிகாரிகள் அமெரிக்கா ஏன் தாக்குதல் நடத்தினோம் என்று வருந்தும் அளவிற்கு முடிவை எடுப்பார்கள். அதே சமயம் போரை முன்னிலைப் படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதியாக, குவாசிம் சுலைமானிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மெயில் கானி பொறுப்பேற்றுள்ளார். குவாசிம் சுலைமானி அமெரிக்கா வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டது குறித்து பேசிய இஸ்மெயில் கானி, சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம் எனவும் ஆவேகமாக கூறியுள்ளார். ஏற்கனவே ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.