இன்னும் 7 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் உத்தரவு... கொரோனா பீதியால் அதிரடி..!
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது உலக மக்களால் பின்பற்றிக் கொண்டுவரும் தனிமனித இடைவெளியை 2020 ஆம் ஆண்டுவரை பின்பற்றுமாறு தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுறுத்தி உள்ளார்.
2020-ஆம் ஆண்டு இறுதிவரை தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என இங்கிலாந்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,636,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184,186 ஆக உயர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 717,444 இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி 56,686 பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் உடல் நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1,6,78,635 பேர் நல்ல உடல் நலத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் இங்கிலாந்தில் மட்டும் 33 ஆயிரத்து 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பிரிட்டன் மாளிகையில் அரச பொறுப்புகளில் இருப்பவர்கள் உட்பட பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது உலக மக்களால் பின்பற்றிக் கொண்டுவரும் தனிமனித இடைவெளியை 2020 ஆம் ஆண்டுவரை பின்பற்றுமாறு இங்கிலாந்து மக்களுக்கு, அந்நாட்டு அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுறுத்தி உள்ளார்.