பிரதமர் மோடிக்கு லண்டனிலும் எதிர்ப்பு...! Go Back Modi வாசகத்துடன் தமிழர்கள் போராட்டம்!

Opposition to Prime Minister in London
Opposition to Prime Minister in London


லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அங்கு வாழும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். Go Back Modi என்ற வாசகத்துடன் கூடிய பதாகையைக் கொண்டு அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, மத்திய அரசு தட்டிக்கழித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை அருகே திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சி தொடக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அன்றைய தினம், அனைவரும் கருப்பு உடை அல்லது கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் எனவும், அனைவரது வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றி துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும், திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், அண்ணா அறிவாலயம் உட்ளளிட்ட இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. திமுக சட்டமன்ற உறுட்பபினர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டும், அதில் மோடியே திரும்பிப்போ என்பதை குறிக்கும் வகையில் MODI GO BACK என்று எழுதப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது மோடியே திரும்பிப் போ என்ற  ஹாஷ்டேக் உலக அளவில் டிரெண்டாகி உள்ளது. இது மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார். லண்டன் சென்ற அவருக்கு அங்கு வாழும் தமிழர்கள், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். Go Back Modi என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தும், ஒரு சாரார் ஆதரவு தெரிவித்தும் உள்ளனர். நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ஒரு சாரார் எதிரப்பு தெரிவித்து வருகின்றனர். மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் வாழ் சீக்கியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios