குடி போதையில் போலீஸ் வாகனத்தையே அடித்து தூக்கிய வேன் டிரைவர்...! வெளியானது சிசிடிவி காட்சிகள்
அமெரிக்காவில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது வேகமாக வந்த வேன் ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றது.
ஓஹியோ மாகாணத்தின் பிரதான சாலையில் காவல்துறை வாகனம் ஒன்று நின்றுக்கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வேன் காவல்துறை வாகனம் மீது பலமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் காவல் துறை வாகனத்தில் இருந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்நிலையில் காவல்துறை வாகனம் மீது, வேன் அதிவேகத்துடன் மோதும் காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளன.
அதில், விபத்து ஏற்படுத்திய வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் குடிபோதையில் சாலையில் நிற்கும் வாகனத்தை கவனிக்காமல் தாருமாறாக ஓட்டிவந்தது தெரிய வந்தது.
இந்த வீடியோவை அமெரிக்க காவல்துறையினர் தற்போது வெளியிட்டு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுருத்தி வருகின்றனர்.