பெண்களை ஆபாசமாக  வீடியோ எடுத்து அதை தன் நண்பர்களுக்கு  விருந்தாக்கி வந்த 61 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.   தன்னைச் சுற்றியுள்ள சிலர்  தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக சில சவாலான விஷயங்களை செய்து அதில் பெயர்  புலங்காகிதம் அடையும் நபர்கள் நம்மில் பலர் உண்டு.   அப்பட அவர்கள் செய்யும் சில சுவாரஸ்யமான செயல்களால் அவர்கள் வாங்கிக் கட்டுகொள்வதையும் பல இடங்களில் நாம் நேரடியாக பார்த்திருக்கக்கூடும். 

அதே நேரத்தில் அந்த சவால்கள் சில நேரங்களில் சொதப்பலாகி அவர்கள் விபரீதத்தில் சிக்குவதையும் கேள்விப்பட்டிருப்போம்.  அந்த வகையில் ஒரு விபரீதமான சவாலில் இறங்கிய நபர் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.  சவாலாக நினைத்து பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த அந்த  61 வயது நபருக்கு 16 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  சீனாவை சேர்ந்த  பூன் ஹேங் வா என்ற நபர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்  பல பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் ஆபாசமாக காணொளி எடுக்க ஆரம்பித்தார்.  அப்போது பேருந்து ஒன்றில் குட்டை பாவாடை அணிந்திருந்த  ஒரு பெண்ணிற்கு தெரியாமல் அவரின் தொடை மற்றும் உள்ளாடையை வீடியோ  எடுத்தபோது அவர் பிடிபட்டார். 

இந்நிலையில் அவரை விசாரித்ததில் நாளொன்றுக்கு சுமார் 4 பெண்களை வீடியோ எடுப்பதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார் என்பது தெரியவந்தது .  இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பெண்களின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக அவருக்கு சுமார் 16 ஆண்டுகாலம் கடுமையான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.