வேகமெடுக்கும் ஒமிக்ரான், மீண்டும் ஊரடங்கு? என்னப்பா நடக்குது இங்க?

பிரிட்டனில் ஒமிக்ரான BA.2 பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே வேகம் எடுக்க தொடங்கி விட்டது.

Omicron BA.2 Subvariant Gaining Ground In US, Covid Tests Show

ஒமிக்ரான் சப்-ரியண்ட் BA.2 அமெரிக்காவில் வேகமெடுக்க துவங்கி இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்த பகீர் தகவல் தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவின் சான் டியாகோ சேர்ந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ஹெலிக்ஸ் ஜனவரி மாத துவக்கத்தில் இருந்து ஒமிக்ரான் BA.2 பரவல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்பித்தில் மெதுவாக பரவ தொடங்கிய நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகளில் அதிகபட்சமாக 70 சதவீதம் வரை ஒமிக்ரான் BA.2 பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.

Omicron BA.2 Subvariant Gaining Ground In US, Covid Tests Show

ஹெலிக்ஸ்-க்கு மூத்த அதிகாரியான வில் லீ, இது போன்ற ஆய்வுகள் மிகவும் அத்தியாவசியமானது. இதன் மூலம் அமெரிக்க மருத்துவ துறையில் எதிர்கால வைரஸ் வேரியண்ட்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் என தெரிவித்தார். பிரிட்டனில் ஒமிக்ரான BA.2 பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே வேகம் எடுக்க தொடங்கி விட்டது. அந்நாட்டின் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக BA.2 வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை சரிந்து வருகிறது. எனினும், இதே நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்காது என வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் மற்ற பகுதிகளை விட நியூ யார்க் நகரில் ஏற்கனவே ஒமிக்ரான் BA.2  வேரியண்ட் மிக வேகமாக பரவ தொடங்கி விட்டது என அந்நாட்டு நோய் தடுப்பு துறை (CDC) தெரிவித்து இருக்கிறது. 

Omicron BA.2 Subvariant Gaining Ground In US, Covid Tests Show

கடந்த வாரத்திற்கான வைரஸ் பாதிப்பு விவரங்களை அமெரிக்க நோய் தடுப்பு பிரிவு இதுவரை வெளியிடவில்லை. பிப்ரவரி மாத துவக்கம் முதலே BA.2 வேரியண்ட் பரவல் இருமடங்கு வரை அதிகரித்து வருவதாக CDC தெரிவித்து இருந்தது. மார்ச் 12 வரை நிறைவு பெற்ற வாரத்தில் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த பாதிப்பில் ஒமிக்ரான் BA.2 மட்டும் 23.1 சதவீதம் இடம்பெற்று இருந்தது.

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுவதாக சான் டியாகோவை சேர்ந்த பிரசோதனை நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த வேரியண்ட் பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற போதும் ஒமிக்ரான் முதல் வேரியண்ட் அளவுக்கு இந்த வேரியண்ட் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே வில் லீ தெரிவித்தார். தடுப்பூசிகளின் மூலம் மக்கள் நோய் தடுப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொண்டு வருவதே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios