அட கடவுளே.. உலகத்துக்கே புத்தி சொன்ன இவருக்கே இந்த நிலைமையா..?? எல்லையை மீறிய கொரோனா..!!
கொரோனா வைரஸ் தடுப்பு களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் டெட் ரோஸ் அதானம்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுதும் குரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னையுத் தான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட் ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.வீட்டிலிருந்தபடியே தனது அலவல் பணிகளை மேற்கொள்ள போவதாகவும் அவர் கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்பு களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் டெட் ரோஸ் அதானம்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகம் முழுதும் குரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 4.65 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 12 லட்சம் பேர் உலக அளவில் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுமார் 3.37 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உலகளவில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. சுமார் 94 லட்சம் பேர் அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் உள்ள இந்தியாவில் சுமார் 82 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பிரத்யேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து மீள முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
தடுப்பூசி வரும்வரை உலக நாடுகள் மிக கவனமாக இருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம்அணிதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது. இந்நிலையில் அந்த அமைப்பின் இயக்குனர் ஜெனரலே கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதாவது இது குறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ள அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத் தானே தனிமைப்படுத்துக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சமீபத்தில் எதேச்சையாக ஒரு நபரை சந்தித்ததாகவும் பின்னர் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்து தானும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அதானம் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு பரிசோதனை மேற்கொண்டதில் தனக்கு வைரஸ் தொற்று உறுதியாகவில்லை என்றும், அது தொடர்பான எந்த அறிகுறிகளும் தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர் இருந்தாலும்கூட தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். நான் நல்ல நலமுடன் உள்ளேன். இதுவரை எந்த அறிகுறியும் எனக்கு இல்லை, எனினும் வருகிற நாட்களில் உலக சுகாதார அமைப்பின் வழிமுறைகளின் படி என்னை தனிமைபடுத்திக் கொண்டு வீட்டிலிருந்தபடியே பணி செய்வேன். அனைவரும் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியம், இதன்மூலம் கொரோனா பரவலின் சங்கிலியை நாம் உடைக்க முடியும். வைரஸை ஒழிக்க முடியும், சுகாதார விஷயங்களை பாதுகாக்க முடியும், கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கவும் மற்றும் கடுமையான பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கும் வேண்டிய பணிகளை நானும் என்னுடன் பணிபுரிபவர்களும் தொடர்ந்து மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.
வைரஸ் தொற்று பரவிய ஆரம்ப முதலிலிருந்தே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு டெட் ரோஸ் அதானம் ஆளாகி வந்தார். சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தினார். டெட்ரோஸ் அதானம் பதவி விலக வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அவை அனைத்தையும் எதிர்கொண்டு தொடர்ந்து அவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென உலக நாடுகளை டெட் ரோஸ் அதானோம் கூறிவந்த நிலையில் அவரே தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.