சிறந்த மனிதராக மாற்றிய அமெரிக்க மக்களுக்கு நன்றி… பிரியா விடை நிகழ்ச்சியில் ஒபாமா உருக்கம்….

கடந்த 20008-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இம்மாதம் 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சிகாகோவில் நடைபெற்ற பிரியாவிடை உரையில் ஒபாமா உருக்கமுடன் அமெரிக்க அதிபராக தான் பதவி வகித்த காலத்தை நினைவு கூர்ந்தார்.

" நானும், எனது மனைவியும் கடந்த சில வாரங்களாகவே பாராட்டு மழையில் நனைந்து விட்டோம். .நீங்கள் என்னை சிறந்த அதிபராக, சிறந்த மனிதராக ஆக்கியுள்ளீர்கள் இதற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


பதவியேற்றபோது இருந்ததை விட அமெரிக்கா சிறந்ததாகவும், வலிமையானதாகவும் மாறியுள்ளது . இன்னும் பத்து நாட்கள்நாட்டின் சாட்சியாகவும் , அடையாளமாகவும் ஜனநாயகம் இருக்கும்.ஒற்றுமையின் அடிப்படையில் தான் ஜனநாயகம்மேம்படும் என்றும் ஒபாமா தெரிவித்தார். 

அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கு டொனால்டு டிரம்பிற்கு நிர்வாக ரீதியாக எந்த பிரச்சனையும் இருக்காது.தவறானநபர்களை தேர்வு செய்து விட்டு வருத்தப்படுவதில் அர்த்தமில்லை.என்றார்

கடந்த எட்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும்  ஐ.எஸ்பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்படும். அமெரிக்கவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாதுஎன்றும் குறிப்பிட்ட ஒபாமா, ஒசாமா உட்பட பல்லாயிரகணக்கான தீவிரவாதிகளை அழித்திருக்கிறோம் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பிரிவினையை தூண்டுவதாக இனவாதம் உள்ளது. இஸ்லாமியருக்கு ஏதிரான வெறுப்புணர்வை ஏற்க்க முடியாது.அமெரிக்காவின் வளர்ச்சியில் குடியேறியவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது," என்று அவர் உருக்கமாக கூறினார்