ஒபாமாவுக்‍கு பிரிவு உபசரிப்பு விழா : முழு ராணுவ மரியாதையுடன் பிரிவு உபசரிப்பு!

அமெரிக்‍க அதிபர் பாரக்‍ ஒபாமாவின் பதவிக்‍காலம் முடிவடைவதையடுத்து Virginia வில் அவருக்‍கு முழு ராணுவ மரியாதையுடன் பிரிவு உபசரிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. 


அமெரிக்‍க அதிபராக கடந்த எட்டு ஆண்டுகளாக பதவி வகித்து வரும் Barack Obama வின் பதவிக்‍காலம் விரைவில் முடிவடைய இருக்‍கும் சூழலில், Virginia வில் உள்ள Myer-Henderson Hallலில் அவருக்‍கு முழு ராணுவ மரியாதையுடன் பிரிவு உபசரிப்பு மற்றும் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

உலக நாடுகளிடையே நல்லுறவு மேம்படுதல், அணுசக்‍தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஒபாமா திறம்பட செயல்பட்டுள்ளார். அவருக்‍கு நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் உரையாற்றிய ஒபாமா, தனது ஆட்சிக்‍கலாத்தில் தமக்‍கு அளிக்‍கப்பட்ட பாதுகாப்பையும், மரியாதையும் எண்ணி மகிழ்ச்சி அடைவதாகவும், தமது அலுவலகம் மற்றும் பணியாளர்களை பிரிவது சற்று வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் எந்த ஒரு பிரச்சினையிலும் அரசுக்‍கு ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.  ஒபாமாவின் பதவி நிறைவு பெற்ற பின்னர், வரும் 20 ஆம் தேதி முதல், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் தனது பணிகளை தொடங்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்‍கது.