Ukraine-Russia War: மும்முனை அனு ஆயுதப்படைகள் தயார்... ரஷ்ய பாதுகாப்புத் துறை அதிரடி!!

அணு ஆயுத மும்முனை படைகள் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

nuclear armed forces are ready says russian soldiers to pudin

அணு ஆயுத மும்முனை படைகள் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 5வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

nuclear armed forces are ready says russian soldiers to pudin

இந்த நிலையில் தரைவழி, நீர்மூழ்கி கப்பல் வழி மற்றும் விமானங்கள் வழி என அணு ஆயுத மும்முனை படைகள் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில், அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதை இன்று ஏற்பதாக தெரிவித்தார்.

nuclear armed forces are ready says russian soldiers to pudin

இதனை தொடர்ந்து இன்று மதியம் இருநாடுகளுக்கும் இடைய பேச்சுவார்த்தை நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், உடனடியாக போர் நிறுத்த வேண்டும், அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும் என அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பில் வலியுறுத்தியிருந்த நிலையில், தரைவழி, நீர்மூழ்கி கப்பல் வழி மற்றும் விமானங்கள் வழி என அணு ஆயுத மும்முனை படைகள் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios