கொரோனா வைரஸில் இருந்து  பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிபவர்கள் அதை முறையாக கையாள வேண்டும் ,  இல்லையென்றால் அதுவே ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது  என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது .  அதாவது முகக் கவசத்தில் படியும் வைரஸ் குறைந்தது 7 நாட்களுக்கு  உயிர்ப்புடன் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனமும் இவ்வாறு கூறியுள்ளது .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில்  உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன, என  தெரிவித்த  உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல்  டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நாடுகள் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய  முயற்சித்து வருகின்றன.  ஆனால் அரசு எடுக்கும் கூடுதல் பாதுகாப்புகள் அனைத்தும் பொதுமக்களுக்கு பயன் அளிக்குமா என்பது  ஆராயப்பட வேண்டும் என்றார். 

பொதுமக்கள் முகமூடி பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நாடுகளிலிருந்தும் நாம் அதிகம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார் ,  அதேபோல் முகமுடி பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் கொரோனா தடுப்பில் முன்னிலையில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் ,  தங்கள் நாட்டு மக்கள் முகமூடியை பயன்படுத்துவது குறித்து அந்தந்த நாடுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம்  எனவும் டெட்ரோஸ் அதானோம்  தெரிவித்துள்ளார் .  குறிப்பாக கைகளை சுத்தம் செய்தல் ,  உடல்ரீதியாக தூரத்தை கடைப்பிடித்தல் ,  தண்ணீர் பற்றாக்குறை ,  என நெருக்கடிகளை நாடுகள் சந்திக்க வேண்டியுள்ளது என அவர் கூறினார் .  குறிப்பாக நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கும் வீட்டில் பாதிக்கப்பட்ட நபரை பராமரிப்பவருக்கும் நிச்சயம் பேஸ் மாஸ்க் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம் எனவும் அவர் கூறினார் .  மற்றவர்கள் முகமூடிகள் அணிந்தால் அவை பாதுகாப்பாகவும் சரியாகவும் பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் அது அதிக ஆபத்தை தரக்கூடியதாக இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார். 

முக மூடியை எப்படி பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வு ஒவ்வொருக்கும் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார் ,  இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வைரஸ் பாரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகமூடிகள் தான் அணிய வேண்டும் என்று இல்லை,  மெல்லிய துணிகளால் ஆன  துப்பட்டாக்களையும்  முகமூடியாக பயன்படுத்தலாம் என தெரிவித்திருந்தார் ,  இந்நிலையில்,   ஒரு முகமூடியில் படியும் வைரஸ் கிருமிகள்  ஏழு நாள் வரை உயிர்ப்புடன் இருக்க கூடும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் எனவே முகமூடிகளை முறையாக பயன்படுத்த வேண்டும் அடிக்கடி முகமூடிகளின் மேற்பரப்பை தொடுவதன் மூலம்  தமக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது ,  எனவே அதன் மேற்பரப்பை தொடுவதை தவிர்க்க வேண்டுமென எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.