கொஞ்சம்  அசந்து தூங்கியது குற்றமா? உயர் அதிகாரிக்கு மரண தண்டனை!

North Koreas vice premier executed for sleeping during speech
North Korea’s vice-premier executed for sleeping during speech


வடகொரிய அதிபர் கிம் கடுமையானவர் என்பது உலகத்திற்கே தெரிந்த ஒன்று தான். அதை நிறுபிக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூத்த அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க உள்ளார் என செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்தும் விதமாக நடத்தப்படும் அணு ஆயுத தாக்குத்லை நிறுத்தப்போவதாக வடகொரிய அதிபர் கிம் அறிவித்தார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராணுவ அதிகாரிகள்,  கலந்துக்கொண்டனர்.

அந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதிபர் கிம் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் 84 வயதுடைய மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தலையை குனிட்ன்துகொண்டே தூங்கியுள்ளார். பேசிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்த அதிபர் கிம் அந்த அதிகாரியின் செயலால் கடுமையான கோபத்திற்கு உள்ளானார். இதனால்   இவருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் நாட்டின் துணை பிரதமர் முக்கிய கூட்டத்தில் தூங்கியதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 ஆனால், சிலரோ வயது முதுமை காரணமாக சற்று அசதியில் இருந்து இருக்கலாம், அதனால் அவருக்கு மரண தண்டனை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios