மூன்றே நாட்களில் 8 லட்சம் பேருக்கு கொரோனா... திணறும் வட கொரியா

வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவு தொல்லையை ஏற்படுத்தி இருக்கிறது என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து இருக்கிறார். 

 

North Koreas Explosive Covid Outbreak 820,620 Cases In 3 Days

வட கொரியாவில் காய்ச்சல் காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வட கொரியாவில் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. வட கொரியா நாட்டு செய்தி நிறுவனமான KCNA இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 

இவர்களில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 550 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவு தொல்லையை ஏற்படுத்தி இருக்கிறது என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து இருக்கிறார். 

ஊரடங்கு:

“அனைத்து நகரங்கள், மாகாணங்கள் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பணியாளர் யூனிட்கள், ப்ரோடக்‌ஷன் யூனிட்கள் குடியிருப்பு யூனிட்கள் தனித்தனியை மூடப்பட்டு உள்ளன,” என்று வட கொரிய செய்தி நிறுவனமான KCNA தெரிவித்து இருக்கிறது.

மிக கடுமையான தனிமைப்படுத்தல் வழிமுறைகளை கடைப்பிடித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வட கொரிய மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு தினந்தோரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. 

வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கடந்த வியாழக் கிழமை அன்று வட கொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதன் காரணமாக அந்நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்தது முதல் முதல் கொரோனா தொற்று கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. உலகின் மிக மோசமான மருத்துவ உள்கட்டமைப்புகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக வட கொரியா பார்க்கப்படுகிறது. வட கொரியாவில் கொரோனா தடுப்பூசிகளோ, நோய் எதிர்ப்பு மருத்துவ முறைகளோ அல்லது ஒரே சமயத்தில் பலருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான வசதி என எதுவும் இல்லை. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios