வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எழுதிய கடிதம்... அமெரிக்காவுக்கு போட்டியாக களத்தில் குதித்த சீனா..!

அதே சமயம் இந்த கடிதத்தை கிம் அனுப்பினாரா அல்லது அவர் சார்பில் அனுப்பப்பட்டதா என்ற விபரம் சரியாக தெரியவில்லை. 

North Korean President Kim Jong Un's letter to China

கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவும், சீனாவும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக முட்டி-மோதிக்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸை சீனா தான் பரப்பியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதுகுறித்த உண்மையை வெளிக்கொணர அமெரிக்க உளவுப்பிரிவான சிஐஏ-வையும் அவர் கையில் எடுத்திருக்கிறார்.

North Korean President Kim Jong Un's letter to China

இந்த நிலையில் தற்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்த தகவல்களை அறிய அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவும் களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியா குறித்த தகவல்களை மிகவும் உன்னிப்பாக அமெரிக்கா தொடர்ந்து கவனித்து வருகிறது. இதற்கிடையில் கிம்மின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள மருத்துவ குழுவொன்றை சீனா, வட கொரியாவுக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா விவகாரத்தில் ஏற்கனவே முட்டிக்கொண்டு நிற்கும் சீனாவும் ,அமெரிக்காவும் தற்போது வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்த உண்மையை வெளிக்கொணருவதிலும் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கி உள்ளன. இதில் முதலில் எந்த நாடு உண்மையை கண்டறிய போகிறது? என்பதை அறிய ஒட்டுமொத்த உலக நாடுகளும் காத்துக்கொண்டு நிற்கின்றன. 

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சுற்றுலா திட்டத்தில் பணிபுரியும் கட்டிடப் பணி செய்வோருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான செய்தியை வடகொரிய பத்திரிக்கையான ரோடாங் சின்முன் வெளியிட்டுள்ளது. கிம் ஜாங் இறந்து விட்டார் மற்றும் மரண படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றெல்லாம் செய்திகள் வரும் நிலையில் அதை பொய் என நிரூபிக்கவே இந்த செய்தியை வெளியிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.North Korean President Kim Jong Un's letter to China

அதன்படி கிம் ஜாங் தனிப்பட்ட முறையில் வோன்சன் நகரில் கடலோர ரிசார்ட்டில் சுற்றுலா திட்டத்தில் பணிபுரியும் கட்டிடப் பணி செய்வோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த கடிதத்தை கிம் அனுப்பினாரா அல்லது அவர் சார்பில் அனுப்பப்பட்டதா என்ற விபரம் சரியாக தெரியவில்லை. கிம் ஜாங் இறந்துவிட்டார் என ஹாங் காங் தொலைக்காட்சி இயக்குனர் ஷுஜியான் ஜிங்கூ சில தினங்களுக்கு கூறியிருந்தார்.

அதே சமயம் வடகொரிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் ஜுன் இன் மூன் கூறுகையில், கிம் நலமாகவும், உயிருடனும் உள்ளார்.
அவர் வோன்சன் நகரில் நகரில் கடந்த 13ஆம் திகதியில் இருந்து தங்கியுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios