வடகொரியாவில் தற்போதுவரை ஒருவருக்குக் கூட கொரோன வைரஸ் கிருமி இல்லை  என அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்  தெரிவித்துள்ளனர் உலகமே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடகொரியாவில் மட்டும் இது எப்படி சாத்தியமானது என  சர்வதேச அளவில் மில்லியன் டாலர் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.   ஆனாலும்  தாங்கள் எடுத்த அதிரடியான நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரஸ் வடகொரியா எல்லைக்குள் ஊடுருவ முடியவில்லை என கொரோயா உறுதியாக கூறி வருகிறது.   சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி மனித பேரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை உலகளவில் 10 லட்சத்தை நெருங்கிவிட்டது  .  50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் அமெரிக்கா , இத்தாலி ,  பிரான்ஸ் ,  ஜெர்மனி போன்ற நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால்   வடகொரியா மட்டும் எந்த சலனமும் இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறது .  

இப்போது  ஒட்டு மொத்த  உலகத்தின் பார்வையும் வடகொரியாவின் பக்கம் திரும்பியுள்ளது, வட கொரோயா மட்டும் எப்படி வைரசிலிருந்து தப்பித்தது என்பது தான் அது.  இந்நிலையில் தனது வெற்றி ரகசியத்தை வெளியிட்டுள்ளது வன கொரோயா,   இது குறித்து தெரிவித்துள்ள வடகொரியா சுகாதாரத்துறை ,  சீனாவில்  வைரஸ் பரவுகிறது என்றவுடன் நாட்டின் எல்லைகளை வடகொரியா உடனே அடைத்ததுடன்,   நாட்டு மக்களுக்கும்  கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது,   நாட்டிற்குள் நுழையும் அத்தனை பயணிகளையும்  முறையான பரிசோதனை செய்தது.  அவர்கள் உடனுக்குடன் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால்  நோய் தோற்றிலிருந்து  வடகொரியா தப்பித்தது .  அதே போல்  நாட்டில் உள்ள அனைத்து இயந்திரங்கள் , கருவிகள் என அத்தியாவசிய உபகரணங்கள் அனைத்தும்  கிருமி நாசினிகளால் சுத்தம் செய்யப்பட்டது.  கடல் போக்குவரத்து விமான போக்குவரத்து என அனைத்தும் நிறுத்தப்பட்டது.  இதன் விளைவுதான் வட கொரோயாவில் கொரோனா பரவாமைக்கு முக்கிய  காரணம் என அந்நாடு தெரிவித்துள்ளது.  அண்டை நாடுகளான சீனா ,  தென்கொரியா போன்ற நாடுகள் வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களின் விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகள் மூலம் தன்னை வட கொரியா தற்காத்துக்கொண்டது என தெரிவித்துள்ளது .  

ஆனால் சில வெளிநாட்டு ஊடகங்கள்  வடகொரியா பொய் சொல்கிறது என கூறுகின்றன.  ஆனால் அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை , வடகொரியாவும் அதன் மக்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதில் வடகொரியா உறுதியாக உள்ளது  என் தெரிவித்துள்ள வட கொரோயா,   சமீபத்தில்  அதிபர் கிங் ஜாங் உன்னுக்கு  அமெரிக்க அதிபர் டொனால்டு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ளது,   அதாவது ட்ரம்ப்,  வைரஸ்  போரில் வடகொரியா அமெரிக்கா  இருவரும் இணைந்து செயல்பட வேண்டும், எந்த உதவிகள் வேண்டுமானாலும்  செய்த அமெரிக்கா தயாராக உள்ளது ,என  கூறியிருந்தார் அதை மேற்கோள் காட்டும்  வடகொரியா,  அதுபோன்ற ஒரு துர்திஷ்டமான நிலை வடகொரியாவுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது.  ஆனால் இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனிசெப் உள்ளிட்ட நிறுவனங்கள் வடகொரியாவுக்கு வைரஸ் கிருமியை கண்டறியும் கருவிகள்,   முகமூடி பாதுகாப்பு உபகரணங்கள் கிருமிநாசினிகள் போன்றவற்றை அனுப்ப திட்டமிட்டிருந்தது குறிப்பிட தக்கது.