Asianet News TamilAsianet News Tamil

ஒருத்தனும் நாய் வளர்க்கக்கூடாது... வளர்ப்பு நாய்களை இறைச்சி கடைக்கு அனுப்ப அதிரடி உத்தரவு..!

சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்காவிற்கும், இறைச்சி கடைகளுக்கும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தென்கொரிய ஊடகங்கள் மூலம் வெளியாகி உள்ளது. 

north korea forcing pet owners to give up pets for meat
Author
North Korea, First Published Aug 19, 2020, 2:40 PM IST

வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வளர்ப்பு நாய்களை ஒப்படைக்க வேண்டுமென அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

north korea forcing pet owners to give up pets for meat

 '25.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வடகொரியாவில் 60 சதவிகித மக்கள் உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்' எனக் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தங்களை மீறி அணு ஏவுகணை சோதனை செய்வதால் வடகொரிய நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை, சமீபத்திய வெள்ளம், கொரோனா அச்சுறுத்தல் ஆகியன இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

உணவு பற்றாக்குறை பிரச்னை காரணமாக அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களிடம் அதிருப்தியை பெற்று வருகிறார். வடகொரியாவில் நிலவும் உணவுப்பற்றாக்குறை குறித்து அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாயை ஒப்படைக்க வேண்டுமென கிம் ஜூலை மாதத்தில் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.north korea forcing pet owners to give up pets for meat

இதை தொடர்ந்து, அதிகாரிகள் செல்லப் பிராணியான நாய்களை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து வருகின்றனர். அவற்றை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்தும் வருகின்றனர். அவற்றில் சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்காவிற்கும், இறைச்சி கடைகளுக்கும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தென்கொரிய ஊடகங்கள் மூலம் வெளியாகி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios