வட கொரிய அதிபர் கிம் ஜாங் முன்னுக்கு அறுவை சிகிச்சை  செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ நாளேடு டெல்லி என்.கே தகவல் தெரிவித்துள்ளது .  அவரது குடும்பத்திற்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மருத்துமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  38 வயதான வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்ணுக்கு ஏப்ரல் மாத தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது .  இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு  பின்னர் கிம்மின் உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.

 

இதுகுறித்து வடகொரியாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் தென் கொரியாவின் என்கே செய்தி நிறுவனம் அமெரிக்க செய்தி நிறுவனங்களின் தகவலை முற்றிலுமாக மறுத்ததுடன்  ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வடகொரிய அதிபர் கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது , அவர் மவுண்ட் கும் காங் ரிசார்ட்டில் உள்ள ஒரு வில்லாவில் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என செய்தி வெளியிட்டது. அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை கிம்மின் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவோ அவர் நிலை என்ன என்பது குறித்து வடகொரிய அரசு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது  . இந்நிலையில் இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் வட கொரிய அதிபர் கிம்மின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டு பரபர்ப்பை ஏற்படுத்தியது,

 

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அதை வழி மொழிந்த்து உலக அளவில் கிம் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. இதுவரை எந்த தகவலையிம் வெளியிடாமல் மௌனம் காத்து வந்த வட கொரோயா தற்போது கிம் தொடர்பாக செய்து ஒன்று வெளியிட்டுள்ளது.  அதாவது  வட கொரிய அதிபர் கிம் ஜாங் முன்னுக்கு அறுவை சிகிச்சை  செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.  வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்க்கு  பியோங்யாங்கில் உள்ள மருத்துவமனைக்கு பதிலாக ஹியாங் சான் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ததற்கு குறிப்பிட்ட காரணங்களளையும் வெளியிட்டுள்ளது.   அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து சிறந்த உதாரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் , அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் அனைவருமே மிகச் சிறந்தவர்கள் என்றும் கிம் அறுவை சிகிச்சையை நிர்வகித்த மருத்துவர் இருதய சம்பந்தப்பட்ட நோய்களில் நிபுணர் என்றும், 

கிம்முக்கு அவர் இருதய நிபுணராக நியமிக்கப்பட்ட பின்னர் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   மருத்துவமனையில் மீதமுள்ள மருத்துவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும் அவர்கள் அனைவரும் ஜெர்மனியில் படித்த அனுபவம் பெற்றவர்கள் என்றும் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது கிம் ஜாங் உன் தனது தந்தையின் மரணத்திற்கு பின்னர் இந்த பிரத்யேக மருத்துவமனை உருவாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன