உலகமே கொரோனா வைரஸ் பீதியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் ,  ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை  வடகொரியா நடத்தியிருப்பது  உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.   உலகமே கொரோனா வைரசால் சிக்கித் தவித்து வரும் நிலையில் வட கொரோயா இந்த வைரஸ் குறித்து எந்த  கவலையும் இல்லாமல் ஏவுகணை சோதனையில் தீவிரம் காட்டி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒருவார கால இடைவெளியில் இரண்டாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது . இது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது .  ஏற்கனவே கொரோனா வைரஸ் பதட்டத்தில் உள்ள ஜப்பான் மற்றும் தென் கொரியா மேலும்  பதற்றத்திற்கு ஆளாகியுள்ளன.  வடகொரோயாவின்  கிழக்கு கடற்கரைப் பகுதியில்  ஹாம்யோங் மாகாணத்திலுள்ள சோன்டாக் இடத்திர்  என்ற இடத்திலிருந்து 3 ஏவுகணைகளை அடுத்தடுத்து  ஏவி சோதனையில் ஈடுபட்டுள்ளது, வடகொரியாவின் இந்த நடவடிக்கையை உறுதி செய்துள்ள தென்கொரியா ராணுவம் , ஏவுகணை சோதனை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது . கடந்த வாரம்  சிறிய அளவிலான தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்திருந்தது .  

இந்நிலையில் மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மட்டுமன்றி சர்வதேச நாடுகளையும் கவலையடைய செய்துள்ளது .  அணு ஆயுத சோதனைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ,  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன்  கடந்த இரண்டு முறை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது .  இந்நிலையில் அணு ஆயுதத் தயாரிப்பை கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை வடகொரியா ஏற்கவில்லை ,  இந்நிலையில்  கோரிக்கையை ஏற்காததால் பொருளாதார தடையை விலக்கிக் கொள்ள ட்ரம்ப் மறுத்துவிட்டார் .  இதன் பின்னர்  வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்காவையும் மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது .