பொதுவாக மிகவும் வயதாகி விட்டதாலும், உறவினர்களால் கைவிடப் பட்டதாலும் பல முதியோர்கள் தங்களுடைய பசியை போக்கிக் கொள்ள பிச்சை எடுத்து வாழ்கையை ஓட்டி வருகின்றனர்.

ஆனால் கை கால்கள் நன்றாக இருந்தும், பிச்சை எடுப்பதை தொழிலாக கூட செய்து வருகின்றனரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த வீடியோ. பிச்சைக்காரர்களிடம்  கட்டு கட்டாக பணம் இருப்பதை நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். 

ஆனால் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் கட்டு கட்டாக கரன்சி நோட்டுகளை காட்டி டீ கடை வைத்துள்ள முதலாளியையே அவரிடம் ஆசிவாதம் வாங்க வைத்திருக்கிறார். 

ஆமாம்.... வட மாநிலத்தில் தினமும் பிச்சை எடுத்து வரும் இளைஞர் ஒருவர் டீ கடைக்கு வந்து டீ கேட்டுள்ளார். அதற்க்கு அந்த கடையின் உரிமையாளர் பணம் இருக்க என கேட்ட தன்னிடம் வைத்துள்ள பணத்தை காட்டி அவரை மிரள வைத்துள்ளார்.