சீனாவில் நாய் பூனை போன்றவற்றை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது , மீறி சாப்பிடுவோருக்கு 16 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சீனாவின் தெற்கு காங்டாக் மாகாணத்திலுள்ள சின்சாய் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .  உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.  இந்த வைரஸ் சீனாவின் ஊக்க நகரில் தோன்றியது அங்குள்ள இறைச்சி கடைகளில் இருந்து  இந்த வைரஸ் பரவி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது .  அதே நேரத்தில் அங்கு உள்ள மோசமான வனவிலங்குகளின் இறைச்சிகளை விற்பனை செய்யும் கூடங்களும்,   கடல் வாழ் உயிரினங்களை விற்பனை செய்யும்  சந்தைகளும் மூடப்பட்டன. 

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது , இந்நிலையில்  மீண்டும் அங்குள்ள இறைச்சிக் கூடங்களும் சந்தைகளும்  செயல்படத் தொடங்கியுள்ளன .  இந்நிலையில்  அதிக அளவில் நாய்  ,  பூனை மற்றும் கொடூரமான வனவிலங்குகளின் இறைச்சிகளை அதிகம் விரும்பி சாப்பிடும் மக்கள் தெற்கு சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரமான ஷென்சனில் நிறைந்துள்ளனர் இந்நிலையில்  தெற்கு சீனா பகுதியில் மோசமான வனவிலங்குகளின் இறைச்சிகள் மற்றும் நாய் பூனை போன்ற வற்றில் இறைச்சிகளை சாப்பிட அங்குள்ள மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .  அதுகுறித்தும் சின்சாய் நகராட்சியில் தீர்மானமும்  நிறைவேற்றப்பட்டுள்ளது.   அதாவது தடையை மீறுவோருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 16 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது .  

அதே போல் மே ஒன்றாம் தேதி முதல் வன விலங்குகளான பாம்பு ,  பல்லி ,  ஓணான் ,  பூரான் போன்ற பூச்சு மற்றும் விலங்குகளை  விற்பதற்கும், வாங்குவதற்கும் ,  உண்ணுவதற்குமான தடை அமலுக்கு வருகிறது .  என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது .  சீனாவில் மீண்டும் இதுபோன்ற உணவுகளை உண்பது  அதிகரித்து வரும் நிலையில்  மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் ஏற்படக் கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது .  சீனாவின் ஷென்சன் நகராட்சியில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்படதக்கது .