ஒரு நாட்டுக்கே அதிபதியான நித்தியானந்தா... இந்து நாட்டை உருவாக்கி தனி சாம்ராஜ்ஜியம்... அதிர வைக்கும் பின்னணி..!
ஈகுவடாரில் வாங்கியுள்ள தனித் தீவுக்கு கைலாஷ் நாடு எனப் பெயரிட உத்தேசித்துள்ளதாகவும், அந்த தீவில் நித்தியானந்தாவின் சீடர்கள் 100 அல்லது 200 பேர் மட்டுமே தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்தியானந்தா, அதன் பின்பு என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது சிஷ்யர்களுடன் நாள்தோறும் பேசி வரும் நித்தியாந்தா, தனது ஒருசில கருத்துகள் மூலம் பேசுபொருளாகி வருகிறார்.
இந்நிலையில், அவர் ஈகுவடாருக்கு பக்கத்தில் ஒரு குட்டித்தீவை அவர்கள் வாங்கி இருப்பதாகவும், அதை பரிபூரணமான ஒரு இந்து நாடாக அறிவ்ப்பதற்கான முயற்சியில் இருப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளிடம் முயற்சிகள் மேற்கொண்டு இருப்பதாகவும், இங்கே இருக்கக்கூடிய ஒட்டு மொத்த தொடர்பும் நித்தியானந்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு இந்தியாவுக்குள் எந்தத் தொடர்பும் தற்போது இல்லை. இந்தியாவில் உள்ள ட்ரஸ்ட், சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் என அனைத்தில் இருந்தும் அவர் தன்னை விடுவித்துக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
அவர் ஈகுவடாரில் வாங்கியுள்ள தனித் தீவுக்கு கைலாஷ் நாடு எனப் பெயரிட உத்தேசித்துள்ளதாகவும், அந்த தீவில் நித்தியானந்தாவின் சீடர்கள் 100 அல்லது 200 பேர் மட்டுமே தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தீவுக்கு நித்தியானந்தா நேபாளம் வழியாக சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் சத்ஸங்கம் என்கிற பெயரில் தினமும் மாலை 7 மணிக்கு யூடியூப்பில் நேரலையில் வந்து பக்தர்களை சந்திப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது.